தமிழக ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும், தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 374 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 22 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இவர்களுக்கு, செப்., 5ல் டில்லியில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய நல்லாசிரியர் விருதை வழங்க உள்ளார்.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற, தமிழக ஆசிரியர்கள் விபரம்:
* எடித் தேவ தயாநிதி - சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை
* மனோகர் - சென்னை கிறிஸ்தவ கல்லுாரி மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை
* வாசுதேவராஜு - ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, அத்திமாஞ்சேரி, திருவள்ளூர்
* திருமலைவாசன் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காவாந்தண்டலம், காஞ்சிபுரம்
* அன்பழகன் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செம்பூர், திருவண்ணாமலை
* ராமசாமி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பண்ணல், நாகப்பட்டினம்
* மேரி வினோதினி - எம்.டி.கிரேன் நடுநிலைப் பள்ளி, திண்டிவனம்
* தங்கசாமி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொன்பரப்பி, அரியலுார்
* ஜான்பீட்டர் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வடகாட்டுபட்டி, திண்டுக்கல்
* வெங்கடாச்சலம் - ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, செந்தாரப்பட்டி, சேலம்
* வாசுகி - சிதம்பரம் நடுநிலைப் பள்ளி, சின்ன வெண்மணி, பெரம்பலுார்
* தாமோதரன் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செங்கமலநாச்சியார்புரம், சிவகாசி
* நரசிம்மன் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கெட்டுப்பட்டி, தர்மபுரி
* சுமதி - மெய்ப்பொருள் துவக்கப் பள்ளி, திருவாரூர்
* விஜயராணி சுகிர்தாபாய், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நெல்லை
* வாசுகி - பி.யு.பி., பள்ளி, கே.ராமநாதபுரம், ஈரோடு
* பாஸ்கரன் - சி.எஸ்.ஐ., போர்டிங் நடுநிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை
* சிவகுமார் - அரசு மேல்நிலைப் பள்ளி, கவரப்பட்டி, புதுக்கோட்டை
* ஜெயச்சந்திரன் - அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப் பள்ளி, தல்லாகுளம், மதுரை
* சிவக்குமார் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, எடையன்காட்டு வலசு, ஈரோடு
* பத்மநாபன் - விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, வைரிசெட்டிப்பாளையம், திருச்சி
* மோகனன் - அரசு மேல்நிலைப் பள்ளி, அருமனை, கன்னியாகுமரி.
No comments:
Post a Comment