பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.இதனையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஈரோட்டில், அந்த அமைப்பின் பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, நவம்பர் மாதம் வரை அரசு ஊழியர்கள் காத்திருக்க வேண்டும் என முதல்வர் கேட்டு கொண்டதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து, போராட்டம் குறித்து ஈரோட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் கூச்சல் குழுப்பம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment