Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 30, 2016

    மருத்துவ நுழைவு தேர்வினை ரத்து செய்ய கவர்னரிடம் மனு!

    மருத்துவ நுழைவு தேர்வினை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என, பிளஸ் 2 மாணவ மாணவிகள், பெற்றோருடன் கவர்னரை சந்தித்து முறையிட்டனர்.

    அண்ணாமலை பல்கலை மையத்தில் சேர்க்கை துவக்கம்

    அண்ணாமலைப் பல்கலையின் தொலைமுறைக் கல்வி இயக்ககத்தின், 2016 - 17ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை சிங்காநல்லுார் படிப்பு மையத்தில் துவங்கியுள்ளது.

    நம்மை முடக்கும் நங்கூரங்கள்!

    நாளைய பளுவை நேற்றைய பளுவோடு சேர்த்து இன்று தூக்க முயற்சிக்கும்போது பலசாலியும் தடுமாறுகிறான்! கடந்த காலத்தை விலை கொடுத்து வாங்கும் அளவு எவரும் பணக்காரர் ஆக முடியாது. நம்மை முன்னேற முடியாமல் தடுப்பது ’நம்மை கட்டுப்படுத்தும் சுய அவநம்பிக்கை அல்லது சுயசந்தேகம்’ என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

    கோரிக்கைகளை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்!

    மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, ஏற்கனவே திட்டமிட்டபடி, மே, 1ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்; இதில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது, என, சுப்ரீம் கோர்ட் உறுதியாக தெரிவித்தது.

    'எல் நினோ'க்கு அடுத்து 'லா நினா': விஞ்ஞானிகள் எச்சரிக்கை

    'எல் நினோ' வெப்ப சலனத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் 'லா நினா' எனும் குளிர் சலனம் துவங்கும் எனவும், இது 'எல் நினோ'வை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு துவங்கிய 'எல் நினோ' காரணமாக இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை நிலவுகிறது. பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவுகிறது.

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.
    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள் வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. 

    தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் செய்ய வேண்டியது கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது

    கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் மற்றும் தேர்தல்  சமயம் என்பதாலும் பெரும்பாலான பள்ளிகளில் உள்ள முக்கிய பொருட்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்.

    **ABL வகுப்பறையில் உள்ள பொருட்களை சரியாக அடுக்கி அதன் பாதுகாப்புக்கு உறுதி செய்திடல் வேண்டும்.

    **பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்து தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள்  பயன் படுத்தும் படி செய்திடல் வேண்டும்.

    மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: மத்திய அரசு யோசனையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தியாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு இன்று மனு செய்திருந்தது.

    தமிழகத்தில் 5.82 கோடி வாக்காளர் ஆண்களை விட பெண்கள் அதிகம்

    தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்குமான, துணை வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில், 5.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2011 சட்டசபை தேர்தலை விட, 1.11 கோடி வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நேற்று துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இனி தேர்தல் வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க முடியாது. இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 20ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின், இரண்டு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 

    இ.பி.எப்., வட்டி 8.8 சதவீதம்

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை, மத்திய அரசு, மீண்டும் 8.8 சதவீதமாக உயர்த்தியது.இ.பி.எப்., வட்டி விகிதத்தை, 2015 - 16ம் நிதியாண்டுக்கு, 8.8 சதவீதமாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான மத்திய வாரியம் பரிந்துரைத்தது.ஆனால், அதற்கு மாறாக, இ.பி.எப்., தொகைக்கு 8.7 சதவீத வட்டியை மட்டும் வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சகம், சில நாட்களுக்கு முன், ஒப்புதல் அளித்தது.

    தமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு

    மத்திய அரசு சார்பில், மைசூரில் நடக்கும், பத்து மாத மொழிக்கல்வி பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களிடம் விருப்பப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், மொழிக்கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு, பத்து மாதம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் உள்ள, 20 மொழிக்கும், அந்தந்த மொழி ஆசிரியர்களை தேர்வு செய்து, ஏழு மையங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.

    மருத்துவ நுழைவுத் தேர்வு: தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை

    மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். வைகோ: காங்கிரஸ் ஆட்சியின்போது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

    மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்

    மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது. இது தொடர்பாக, உச்ச நிதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தேவ், ஏ.கே,கோயல் அமர்வு முன்பு அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹாத்கி இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்தார்.

    பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    மே இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு?

    பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அல்லது மே 9-ஆம் தேதியன்று வெளியாகக் கூடும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர்.

    மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்

    மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.

    Friday, April 29, 2016

    Changes in National Pension System proposed in the Finance Bill, 2016

    Press Information Bureau
    Government of India
    Ministry of Labour & Employment

    27-April-2016 16:52 IST 
    Changes in NPS

    The Government has proposed the following in the Finance Bill, 2016 with regard to the National Pension System (NPS):

    Shri Bandaru Dattatreya, Minister of State (IC)

    i. Allowing 40 per cent of the NPS corpus tax exempt on lump sum withdrawal.
    ii. Waiving service tax on the NPS corpus utilized for purchase of annuity.
    iii. The amount receivable by the nominee in case of death of the subscriber covered under NPS has been made tax exempt.
    iv. One-time portability without any tax implication has been allowed to the subscriber for shifting from recognized provident fund to NPS.

    தபால் ஓட்டுகளில் மீண்டும் குளறுபடி: செல்லாதவை அதிகரிக்கும் அபாயம்

    தேர்தல் கமிஷன் குளறுபடியால், நடப்பு ஆண்டும், தபால் ஓட்டுகளில், செல்லாத ஓட்டுகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.தமிழகம் முழுவதும், சட்டசபை தேர்தல் பணிகளுக்காக, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தங்கள் ஓட்டை, தபால் ஓட்டு மூலம் செலுத்துகின்றனர்.

    எஸ்.எம்.எஸ்-ல் வருகிறது வேட்பாளர்களின் விவரம்

    சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதியானவுடன், அவர்களது பெயர்-சின்னம் குறித்த தகவல்கள் வாக்காளர்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்து சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

    தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் மிகவும் குறைவாக உள்ளது!

    வாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் 2ஆம் நிலை அலுவலர், 17ஏ பதிவேடு பராமரித்தல், அழியாத மை வைத்தல், பதிவேட்டில் விடுதல் இன்றி ஞயதுல்லியமாக பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு: தேதிகளை அறிவித்தது உச்சநீதிமன்றம்

    அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பான தீர்ப்பை இன்று வெளியிட்டது உச்சநீதிமன்றம். 

    குறைந்த விலைக்கு ஸ்மார்ட் போன் சாத்தியமா?

    டாகோஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் 888 ரூபாய்க்கு ஸ்மார்ட் போனை விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபீரிடம்-251 என்னும் ஸ்மார்ட் போன் 251 ரூபாய்க்கு விற்கப்படும் என விளம்பரம் செய்தது. இதற்காக இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் பலர் முன் பதிவு செய்தனர். முன்பதிவு செய்யும் போது இணையதளம் இயங்காமல் போனதால் அந்நிறுவனம் குறித்து மக்களிடையே பல சந்தேகங்கள் ஏற்பட்டது.

    சாஸ்த்ராவில் பயிற்சி பெற்ற 30 மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி

    தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இரண்டாண்டு இலவச பயிற்சி வகுப்பில் படித்த 30 மாணவர்கள் இணை நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற்றனர். இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    பி.எப்.,க்கு 8.7% வட்டி தரக்கூட நிதியே இல்லை: நிதியமைச்சகம் திடீர் விளக்கம்

    பி.எப்.,க்கு 8.7 சதவீத வட்டி வழங்கக்கூட நிதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு 2015-16 நிதியாண்டுக்கான வட்டியாக 8.8 சதவீதம் அளிக்க வேண்டும் மத்திய அறக்கட்டளை வாரியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 8.7 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்தது.

    வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்

    வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறினார்.கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 17 ஆயிரம் ஆசிரியர்கள் பி.யூ.கல்லூரி கல்வி வாரிய நிர்வாகம் மற்றும் தேர்வாணைய நிர்வாகத்தை தனித்தனியாக பிரித்து அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

    விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி: அதிவேக சேவையின் மூலம் அசத்துகிறது பாஸ்போர்ட் துறை

    பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.

    தொகுதிக்கு இரு நடமாடும் மருத்துவ குழு: தேர்தல் பணியில் ஈடுபடுவோர் கோரிக்கை ஏற்பு

    மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு: தேதிகளை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

    அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பான தீர்ப்பை இன்று வெளியிட்டது உச்சநீதிமன்றம்.

    TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.

    ITEM NO.90 REGISTRAR COURT. 2 SECTION XII
    S U P R E M E C O U R T O F I N D I A
    RECORD OF PROCEEDINGS
    BEFORE THE REGISTRAR MR. M V RAMESH
    Petition(s) for Special Leave to Appeal (C) No(s). 
    26256-26257/2015
    STATE OF TAMIL NADU, REP. BY ITS SECRETARY TO GOVT., SCHOOL 
    EDUCATION (TRB) DEPARTMENT AND ORS.
    Petitioner(s)
    VERSUS
    S. VINCENT AND ORS Respondent(s)
    (with office report)
    WITH
    SLP(C) No. 26461-26463/2015
    SLP(C) No. 26464/2015
    (With Office Report)
    Date : 27/04/2016 These petitions were called on for hearing today.

    Thursday, April 28, 2016

    மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணையை தாக்கல் செய்ய சுப்ரிம் கோர்ட் உத்தரவு

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்துவதற்கு மத்திய அரசும், மருத்துவ கல்வி கவுன்சிலும் சம்மதம் தெரிவித்துள்ளன. தேர்வுக்கான கால அட்டவணையை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மனு விவரம் நாடு முழுவதும் 2016-17-ம் கல்வி ஆண்டு மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

    7th Pay Commission Latest News – Minister’s reply on financial outgo and implementation Date

    7th Pay Commission likely Implementation date and Financial Implication:

    Likely 7th CPC Implementation Date : 7th Pay Commission recommendations to be implementated after approval of the Cabinet on completion of screening of suggestions by Empowered Committee of secretaries which is on the job presently.

    தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை !!! 100% தபால் ஓட்டு பதிவிற்காக...

    தபால் ஓட்டு பதிவு செய்யும் போது  கவனிக்க  ...
    முதலில்  கட்சிகளின் சின்னம்  அடங்கிய  துண்டு  சீட்டில் தங்களுக்கு  பிடித்த  சின்னத்துக்கு அருகில் ✅  டிக் அடிக்க  வேண்டும்.

    *** நாம்  அடிக்கின்ற டிக் பக்கத்தில்  இருக்கும்  சின்னத்தில் படாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும்.

    ***டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற Rose Color Office Coverல் வைத்து ஒட்ட வேண்டும்.

    ***Stable பண்ணக்கூடாது.

    746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்: 8 லட்சம் மாணவர்கள் குழப்பம்

    தமிழகத்தில் போதிய நிலமில்லாத, 746 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம், மே, 31ம் தேதியுடன் முடிவதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.தமிழக அரசின் நிபுணர் குழு பரிந்துரையின்படி, போதிய நிலம் இல்லாத, 746 தனியார் பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. மீண்டும் அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வித் துறை செயலகம் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், 'பாடம்' நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

    ஆந்திர அரசு ஊழியர்களுக்குஅடிக்குது 'லக்கி பிரைஸ்'

    ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் நிர்மாணிக்கப்பட்டு வரும் அமராவதியில் பணியாற்றும் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு, வாரத்தில், ஐந்து நாள் வேலை, 30 சதவீத கூடுதல் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளை அளிக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

    பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? 8 லட்சம் பேர் பரிதவிப்பு

    8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுமுடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படவில்லை.

    தேர்தல் பணி நியமன தகுதி சிறப்பு ஆசிரியர்கள் கவலை

    "தேர்தல் பணியில், எந்த "கிரேடு' அடிப்படையில் நியமிக்கப்படுகிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என, சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி, வாழ்வியல் திறன் கற்றுத்தருவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள், மாணவர்களுக்கு மூன்று மணி நேரம் பாடம் கற்றுத்தருவர். மாதம், 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

    மே மாதம் இட மாறுதல் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

    மே மாதம் பொது இட மாறுதல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர்கள் இடையே வலுத்துள்ளது. அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பொது இட மாறுதல் வழங்கப்படும். மே மாதத்தில், மாவட்ட தலைநகரங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் தங்கள் விருப்ப அடிப்படையில், புதிய பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவது வழக்கம்.

    நடமாடும் மருத்துவ குழு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

    "தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடனடியாக சிகிச்சையளிக்க, நடமாடும் மருத்துவ குழு ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முழு நேரமும் தேர்தல் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அவர்கள், உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில், ஆசிரியர்களின் உடல் நலம் பாதிக்க வாய்ப்புள்ளது.

    கல்வித் துறை எச்சரிக்கையை மீறும் தனியார் பள்ளிகள்

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    மே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற மே 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Wednesday, April 27, 2016

    வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 1

    வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும்
    * வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் தங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் அமைவிடம் மற்றும் வழித்தடம் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும்
    வாக்குபதிவுக்கு முந்தையநாள் பகல் 12 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிக்கு சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

    வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 2

    வாக்குபதிவு அலுவலர்கள், போலீசார் அனைவரும் வந்துள்ளனரா என்பதை உறுதி செய்து, வரவில்லை எனில் மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குசாவடியில் போதுமான இட வசதி, வாக்காளர்கள் உள்ளே நுழையவும், வெளியேறவும் தனித்தனி வழிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    Tuesday, April 26, 2016

    அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: ஐகோர்ட்

    அரசு ஊழியரின் முதல் மனைவி இருக்கும் போது அல்லது முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தால், அப்பெண் குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முதுவயலைச் சேர்ந்தவர் வேலு; வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றினார்.

    அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவு

    வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில் 10 சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர், ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் வகையில் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பணியாளர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு?

    பணியாளர் பற்றாக்குறையை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டதால், எட்டு பதிவு மாவட்டங்களில், சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு போட வேண்டிய ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், சொத்து பரிமாற்ற ஆவணங்களை பதிவு செய்ய, 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்க, 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.நடைமுறை இந்த அலுவலகங்களில், 30 - 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.

    ஒடிஸா முழுவதும் வாட்டுகிறது வெயில்: பள்ளிகளுக்கு முன்னதாகவே கோடை விடுமுறை

    மிகக் கடுமையான கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு நா ளை முதல் கோடை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா மாநில அரசு.ஒடிசாவில் கடந்த சில நாட்களாக 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் வாட்டி வருகிறது.

    பணி நேரத்துக்கு வரம்பு வகுக்க வேண்டும்:காவல்துறை ஆணையருக்கு காவலர் பகிரங்க கடிதம்

    காவல் துறையில் பணியாற்றும் தன்னைப் போன்றோருக்கு பணி நேர வரம்பை வகுக்க வேண்டும் என்று தில்லி காவல் துறை ஆணையர் அலோக் வர்மாவுக்கு காவலர் ஒருவர் பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி காவல் ஆணையர் அலோக் குமார் வர்மாவுக்கு அந்தக் காவலர் அண்மையில் எழுதியுள்ள கடிதம் ஊடகங்களில் கசிந்துள்ளது. அதன் விவரம்:

    கணினி ஆசிரியர்களுக்கான தேசிய விருது: மே 31-க்குள் அனுப்ப கல்வித்துறை அறிவுறுத்தல்

    நிகழ் கல்வியாண்டில் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து மே 31-ஆம் தேதிக்கு முன் அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களை பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

    தேர்தல் பயிற்சிக்கு வந்து திமுகவுக்கு ஆதரவு திரட்டிய ஆசிரியர்கள்: அதிமுகவினரின் எதிர்ப்பால் பரபரப்பு

    வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள் சிலர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர். இதனை அதிமுகவினர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்தல் அலுவலர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

    அச்சுறுத்தலை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.பணப்பட்டுவாடா,தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களை மாவட்டத் தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரடியாக சென்று விசாரிக்கின்றனர். பாதுகாப்பின்றி செல்லும் அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

    இபிஎப்-க்கு 8.7 சதவிகித வட்டி; மத்திய அரசு ஒப்புதல்

    2015-16-ம் நிதி ஆண்டுக்கான இபிஎப் டெபாசிட் திட்டங்களுக்கு 8.7 சதவிகிதம் வட்டி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதி அதாவது (இபிஎப்) டெபாசிட் திட்டங்களுக்கு 8.7 சதவிகிதம் வட்டி அளிக்க

    அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவு

    வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில் 10 சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர், ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் வகையில் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Monday, April 25, 2016

    தாய்மொழி வழி கல்வி; மத்திய அரசு திட்டம்

    அலுவலகப் பணிகளில், ஹிந்தியின் பயன்பாடு குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:

    கல்வி முறை சீரமைக்கப்படும்!

    2016ம் ஆண்டிற்கான  தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, கல்வி  ஓர் பார்வை 

    சாத்தியம்:

    மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு நிகராக அரசு பள்ளிகளின் தகுதியை மேம்படுத்த கல்வி முறை சீரமைக்கப்படும்.

    மாணவர் சேர்க்கை அதிகரிக்க அறிவுரை

    அரசு பள்ளிகளில், கடந்தாண்டை விட, 10 சதவீதம் வரை, மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளி திறக்கப்படும் நாளில் ஆசிரியர், மாணவர் வருகை பதிவை துவக்கும் வகையில், பதிவேடுகளை தயார் செய்ய வேண்டும். பள்ளி திறந்த நாளில், பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ் ஆப்பால் அக்கப்போர்; கல்லூரியில் கடும் மோதல்

    செல்பி மோகத்தால், பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. வாட்ஸ் ஆப்பில், கல்லுாரி மாணவர்களிடையே நடந்த மோதலால், ஒருவர் பலத்த காயமடைந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள கர்வாரே கல்லுாரி மாணவர்கள், வாட்ஸ் ஆப் செயலியில் இணைந்துள்ளனர். இக்கல்லுாரியில் பி.பி.ஏ., படிக்கும் மாணவர், சாங்கேட் சலுாங்கேயின் பிறந்த நாளையொட்டி அந்த குழுவுக்கு, அவருடைய பெயரை, அவருடைய நண்பர் அக் ஷய் தின்கர், சில தினங்களுக்கு முன் சூட்டினார்.

    தலைமையாசிரியர்களுக்கு சி.இ.ஓ., பதவி உயர்வு!

    மதுரையில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பொன்முடி தலைமை வகித்தார். பொது செயலாளர் ரமேஷ், பொருளாளர் சண்முகநாதன், அமைப்பு செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அனந்தராமன் வரவேற்றார். பதவி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண கருணாகரன் சீராய்வுக் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். 

    வாழ்வின் அங்கம் கணிதம்!

    சில மாணவர்களுக்கு கணிதம் என்றாலே ஒரு வித பயம்; வேறு சில மாணவர்களுக்கு கணிதப் பாடத்தின் மீது அதீத ஆர்வம். ஒரே வகுப்பில் இந்த இரண்டு நிலை மாணவர்களையும் மிகச் சாதாரணமாக பார்க்க முடியும். உண்மையில் கணிதம், வாழ்க்கையில் யாராலும் தவிர்க்கமுடியாத ஒரு அற்புதமான துறை!

    தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் அவதி!

    சட்டசபை தேர்தல் தொடர்பாக, ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட பயிற்சி வகுப்பு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், தேர்தல் அதிகாரிகள், எந்த அடிப்படை வசதியையும் செய்யாததால், ஆசிரியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சட்டசபை தேர்தல் அன்று, ஓட்டுச்சாவடி மையத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களை ஒருங்கிணைத்து, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்புதல்; ஓட்டு எண்ணிக்கை போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    கோடை துவங்கியாச்சு பெற்றோர்களே உஷார்: அறிவுத்திறன்களை வளர்க்க வழி செய்வோமே: அவசியம் கண்காணிப்பு

    பள்ளி வகுப்புகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் நிலையில், தற்போது வெயில் கொளுத்தி வருவதால் தங்களது பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் கண்காணிப்பு மிக அவசியமாகிறது. கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகதானகவும் இருக்குமாறு பெற்றோர்கள் பார்த்துகொள்ளவேண்டும்.

    மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு

    தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.

    கை குழந்தையோடு வருவோருக்கு... முன்னுரிமை! மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை

    ஓட்டளிக்க வரும் முதியோர், நிறைமாத கர்ப்பிணிகள், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓட்டுச்சாவடிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என, திருப்பூர் கலெக்டர் ஜெயந்தி அறிவுறுத்தினார்.

    இறுதி வாக்காளர் பட்டியல் 29ம் தேதி வெளியீடு

    'இறுதி வாக்காளர் பட்டியல், 29ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.தமிழகத்தில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஜன., 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதன்பின், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த வாக்காளர்களின் பெயர், இறந்தவர்களின் பெயர், என, ஆறு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மையங்களில் நடைபெற்று வந்த பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. மார்ச் 14-ஆம் தேதி முதலே தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

    பள்ளிக் குழந்தைகளை கண்காணிக்க புதிய நடைமுறை

    நாடு முழுவதிலுமுள்ள சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை தெரிவித்தார்.

    மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?

    பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.

    பள்ளிக் குழந்தைகளை கண்காணிக்க புதிய நடைமுறை

    நாடு முழுவதிலுமுள்ள சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை தெரிவித்தார்.

    108 ஆண்டுகளுக்குப் பின்பு வேலூரில் 111 டிகிரி வெயில்

    தமிழகத்தில் வட மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். வேலூரில் இன்று அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் சராசரி வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை  பதிவாகும். கோடை வெயிலின் உச்சமான 'கத்திரி' வெயில் காலத்தில், 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவும்.

    தரமான கல்வி தருவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: நரேந்திர மோடி

    நாடு முழுவதும் தரமான கல்வி தருவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தனது 19-வது 'மன் கி பாத்' வானொலி உரையின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

    Friday, April 22, 2016

    15169 பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்காக ஆண்டுக்கு 400 கோடி முதல் 500 கோடியே போதுமானது - அரசு கவனம் செலுத்த கோரிக்கை!!!

    பகுதிநேர ஆசிரியர் பணி  நியமனங்கள், இந்தியா முழுவதும் திட்டத்தின் அடிப்படையிலான பணியாக, மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்களிப்புடன்(65%:35%, 60%:40%, 50%:50%) அனைவருக்கும் கல்வி இயக்கம்
    மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு இவ்வேலையை ஓராண்டு சாதனை வேலையாக 2012ம் ஆண்டு அறிவித்து வழங்கியது. பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் School Education(C2) Department G.O.(MS) No.177 Dated:11.11.2011ன்படி 16549 பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்ய, முறைப்படி விளம்பரங்களை வேலைவாய்ப்பு அலுவலகம்  மூலமும், தினசரி நாளிதழ்கள் மூலமும் செய்தது.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2016 கோடை விடுமுறை நாட்களில் பள்ளித் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய குறித்து அறிவுரைகள்

    எதிர்பார்ப்புகள் மட்டும் போதுமா?

    பள்ளிப்படிப்பிலும் சரி, கல்லூரிப் படிப்பிலும் சரி தங்களது பிள்ளைகளிடம், பெற்றோர் எதிர்ப்பார்ப்பது என்ன? பிளஸ் 2 வரை, படிப்பு மற்றும் மதிப்பெண் ஆகியவை தானே! மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களைப் பற்றி யாராவது பேசுகிறார்களா? சரி, பிளஸ் 2க்கு பிறகு நான்கு ஆண்டு கல்லூரி படிப்பில் சேர்க்கும்போது, பெற்றோரது எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது? கல்லூரிப்படிப்பு முடிந்து வெளியே வரும்போது, கையில் வேலையுடன் வருகிறார்களா? என்பது மட்டும்தானே!

    மொழிப்பாடத்தில் ஒரு தாள் நடைமுறை; ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    மொழிப்பாடத்தில் ஒரு தாள் நடைமுறையை அமல்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. மாநிலத் துணைத் தலைவர் சேதுச்செல்வம், மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறியதாவது: 

    தனித்தேர்வர்கள் ’பிட்’ அடித்து உற்சாகம்!

    தேனியில் நேற்று நடந்த 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான கணிதத்தேர்வில் கல்வித்துறை அதிகாரிகளின் ஆசியோடு, பலர் பிட் அடித்ததாக புகார் எழுந்துள்ளது. தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.18ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. தேனியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை கணிதத்தேர்வு நடந்தது.

    மே இறுதிக்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு

    அனைத்து பள்ளி, கல்லூரி பஸ்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி, மே இறுதிக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என, ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு, தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

    போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: குழப்பத்திற்கும் தீர்வு

    போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத் தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது. சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார். இதையடுத்து 2012, 2013 ல் தகுதித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது.

    தேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரி பணி

    தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக அதிகாரி பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணி: Director (Academic)

    சம்பளம்: 37,400 - 67,000

    பணி: Deputy Director (Administration)

    சம்பளம்: மாதம் 15,600 - 39,100

    சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழங்க 7.5 லட்சம் புத்தகங்கள் தயார்

    தமிழகம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க 7.5 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. இது குறித்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண் இயக்குநர் மைதிலி கே. ராஜேந்திரன் கூறியதாவது: 

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம்

    அடுத்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்காக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண் இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன் கூறியதாவது: 

    அரசுப் பள்ளி ஆசிரியர் இட மாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

    அரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியரின் இட மாற்றத்தை கண்டித்து அந்தப் பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் புதன்கிழமை ஈடுபட்டனர். அரூர் ஒன்றியம், வேப்பநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் 136 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆங்கிலப் பாட ஆசிரியர் காந்தி உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

    தேர்தல் பணியாளர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கான அடையாள அட்டையை கட்டாயம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்றார் மாவட்டத் தேர்தல் அலுவலர் சு. கணேஷ். சட்டப்பேரவைத் தோóதலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனு பெறும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக புதுகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:

    Thursday, April 21, 2016

    அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்! ராமதாஸ்

    பா.ம.க. ஆட்சிக்கு வந்ததும், அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை.

    அரசுப் பள்ளி துப்புரவு தொழிலாளர்கள் ஊதியமின்றித் தவிப்பு: நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

    கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளி துப்புரவுத் தொழிலாளர்கள் ஊதியமின்றி தவித்து வருவதால், இதுகுறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி வருகின்றனர்.

    வாக்குச்சாவடி மையஅலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் கணினி மூலம் தேர்வு

    கணினி மூலம் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் தேர்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் டி.பி. ராஜேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:

    இன்று முதல் மே 20ம் தேதி வரை மாநகராட்சியில் விடுப்பு கிடையாது

    'தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் தேர்தல் பணிகள் முடியும் வரை, மாநகராட்சியின் எந்த ஒரு பணியாளருக்கும், எந்த காரணத்தை முன்னிட்டும் விடுப்பு கிடையாது. மீறி விடுப்பு எடுப்போர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    படிகள் - அகவிலைப்படி - 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

    Wednesday, April 20, 2016

    தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

    தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய அகவிலைப்படி 119 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.1.1.2016-ம் தேதி முன்தேதியிட்டு வழங்கப்படும்.

    கொளுத்தும் வெயிலால் குலை நடுங்கும் மாணவர்கள். பள்ளி வேலை நாட்களை குறைத்து விடுமுறை அறிவிக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் கொடுமை தாங்காமல் பொதுமக்களே வெளியில் நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தொடக்க நடு
    நிலைப்பள்ளிக்கு வருகிற 30ந் தேதி வரை பள்ளி வேலை நாட்களாக இருப்பதால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பள்ளி வேலை நாட்களை குறைத்து உடனடியாக விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது; 

    POSTS OF LIBRARIAN / ASSISTANT LIBRARIAN IN VARIOUS SERVICES

    POSTS INCLUDED IN GROUP-IV SERVICES, 2013–14 & 2014–15

    POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES - I EXAMINATION (GROUP–I SERVICES) (PRELIMS)

    மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 686 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    ஆசிரியர்களுக்கு இயக்குனரகம் தடை

    விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தடை விதித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 15ம் தேதி துவங்கி, ஏப்., 13ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ம் தேதி துவங்கியது. 

    பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

    பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி 15 மாவட்டங்களில் துவங்கி உள்ளது.படிக்கும் வயதில் வேலைக்கு செல்லும் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்ப்பதற்காக, மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    பி.எப். தொகையை எடுப்பதில் கட்டுப்பாடுகள் இல்லை: புதிய விதிமுறை அறிவிக்கையை ரத்து செய்தது மத்திய அரசு

    பி.எப். தொகையை மொத்தமாக எடுப்பதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தொழிலாளர்கள் தங்களின் பி.எப். கணக்கில் உள்ள தொகையில் இருந்து தங்களின் தேவைக்கு ஏற்ப வீடு கட்டுதல், மருத்துவ செலவு, திருமணம் தொடர்பான தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், ஒரு நிறுவனத்தின் வேலையில் இருந்து விலகியபின்னர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், அவர் தனது பி.எப். கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்பப் பெற முடியும். 

    "பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு கண்காணிக்கப்படுகிறது"

    பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது என அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார். வீதி, வீதியாகக் கணக்கெடுப்பு: மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும், இலவச கட்டாய கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும்.

    TENTATIVE SCHEDULE FOR CONDUCTING TRAINING CLASSES FOR POLLING PERSONNEL

    Tuesday, April 19, 2016

    புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது; மத்திய அரசு

    இன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015ம் வருடம் மார்ச் 1ம் தேதி வரையில் மத்திய அரசில் 33.05 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனை இந்த ஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்த ஆண்டு மார்ச்1க்குள் 35.23 லட்சம் ஊழியர்களாவும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரயில்வே துறையிலும் ஆட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவ படிப்புக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்

    மருத்துவ படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்பமுறை, அமலுக்கு வருகிறது. குழப்பங்களை தடுக்க, வழக்கமான காகித விண்ணப்ப முறையையும் தொடர, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், இன்ஜி., படிப்புக்கு, முதல் முறையாக, ஆன்லைன் விண்ணப்ப முறை அமலுக்கு வந்துள்ளது. ஏப்., 15 முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதற்கு முன் கலந்தாய்வு நடத்த வேண்டிய, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு
    களுக்கான விண்ணப்பம் குறித்து எந்த அறிவிப்பும் வராதது, மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எம்.பார்ம்., படிப்பில் சேரமே 8ல் நுழைவு தேர்வு

    எம்.பார்ம்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, மே, 8ல் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உட்பட்ட, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், எம்.பார்ம்., படிப்புக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    தொடக்க / நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை மற்றும் கருத்துரு படிவம்

    தமிழ் இணைய வழி கல்விக் கழகம் - கான் கல்விக் கழகக் காணொளி மொழிப் பெயர்ப்பு பணிமனை - ஆசிரியர்கள் பணி விடுவிப்பு செய்தல் சார்பு

    தரமான கல்வியை இலவசமாக வழங்குவது அரசின் கடமை; கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தல்.

    கொளுத்தும் வெயிலில் தவிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள்; ஏப்ரல் 30 வரை தொடரும் வகுப்புகள்

    Monday, April 18, 2016

    பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!

    பெரு நிறுவனங்கள் முதல் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் வரை ஊழியர்களின் நிலைமை மிக மோசம்

    கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நான் பணிபுரிந்த ‘ஹப்ஸ்பாட்’ எனும் மென்பொருள் நிறுவனத்தில், ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுவதைப் ‘பட்டம் பெறுதல்’ என்று அழைப்பார்கள். அணியினர் அனைவருக்கும் பாஸிடமிருந்து குதூகலமான மின்னஞ்சல் ஒன்று வரும். “அன்புள்ள அணியினருக்கு, நம்முடன் பணிபுரிந்த ‘இன்னார்’ பட்டம் பெற்றுவிட்டார் என்பதைத் தெரிவிக்கவே இந்த மின்னஞ்சல்.

    சுலபமான 'மொபைல்' பண பரிமாற்றம்; மத்திய அரசின் திட்டம் அறிமுகம்

    'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல், மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசின், தேசிய பணம் செலுத்தும் வாரியம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி இணைந்து, இந்த புதிய முறையை வடிவமைத்து உள்ளன.தற்போது, நாடு முழுவதும் நடக்கும் வர்த்தகத்தில், 95 சதவீதம் மற்றும் அதன் மதிப்பில், 65 சதவீதம் ரொக்கமாகவே செலுத்தப்படுகிறது.

    கோடைக்கேற்ற உணவு முறைக்கு மாறுவோம்...

    கால நிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது. அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில் சரும பாதிப்பு, வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், கட்டி போன்றவை ஏற்படுகிறது. எனவே, அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பார்க்கலாம்.

    இந்திய அஞ்சல் துறையில் 374 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

    இந்திய அஞ்சல் துறையின் மத்தியப் பிரதேசம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 374 தபால்காரர், மின்னஞ்சல் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்கான வாக்கு சீட்டு பெறுதல் குறித்து பள்ளி கல்வி செயலரின் அறிவுரைகள்

    பள்ளிக்கூடங்களில் விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது அதிகாரி எச்சரிக்கை

    பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளை நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கை தட்டினால் இவ்ளோ பலன்களா?.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!...

    கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதய நோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம் தான். அதனால் தான் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்று கூறியுள்ளனர். எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கிற நிலை வந்தால் உடம்பை எந்த நோயும் நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

    இரண்டு நாட்களில் 40 ஆயிரம் பேர் இன்ஜி., படிக்க விண்ணப்பம்

    பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 570 கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலை மூலம் ஒற்றை சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

    10 ம் வகுப்பு கணிதத்தில் அறிவித்த கருணை மதிப்பெண்ணும் போச்சு

    அரசு தேர்வுத்துறையின் புதிய விதிமுறையால் 10 ம் வகுப்பு கணிதத்தில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்றுமுன்தினம் (ஏப்., 16) துவங்கியது. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தினர். இன்று (ஏப்., 18) முதல் உதவி தேர்வாளர்கள் திருத்த உள்ளனர். கணிதத் தேர்வில் பிரிவு 4 ல் 47 வது 'அ' பிரிவு 'கிராப்க்கான' (10 மதிப்பெண்கள்) வினாவில் இரு சமன்பாடுகள் கொடுக்கப்பட்டு இருந்தன.

    பிளஸ் 1லும் 'ஆல் பாஸ்:' ஆசிரியர்கள் குழப்பம்

    'பிளஸ் 1 மாணவர்களுக்கு கண்டிப்பாக, 95 சதவீத தேர்ச்சி வழங்க வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதால், பள்ளி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்து உள்ளன. அதனால், பல பள்ளிகள், தேர்ச்சி தகுதி இல்லாத மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் எனப்படும், 'டிசி'யை கட்டாயமாக கொடுத்து வெளியேற்ற முயற்சித்துள்ளன.

    10க்கு புதிய நிபந்தனை:மொழி பாடங்களில் 'சென்டம்' கஷ்டம்

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு, 'சென்டம்' வழங்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 13ல் முடிந்தது; 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும், 40க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. இந்த ஆண்டு முதல், விடைத்தாள் திருத்தத்தில் மொழி பாடங்களுக்கு மட்டும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு

    சென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான, டிசம்பர் மாத தேர்வுகள், கன மழையால் தள்ளி வைக்கப்பட்டு, ஜனவரியில் நடத்தப்பட்டது.

    Sunday, April 17, 2016

    தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?

    அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ளதால் அறிவிப்பு ஏதும் வெளியாக வாய்ப்பு இல்லையென்றும், ஆனால் கோப்புகள் தயாராக உள்ளதெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Saturday, April 16, 2016

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் இன்று 14.04.2016 அன்று கலைஞர் அவர்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்

    தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது

    அரசாணை எண்.63 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.4.16 தொடக்கக்கல்வி, கரூர், திண்டுக்கல், திரூப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திருமதி.மு.கவிதா, திருமதி.பி.புவனேஸ்வரி, திருமதி.து.நிர்மலா, திருமதி.கு.அனுஜா, திருமதி.கு.தெய்வப்பிரபா, திருமதி.பு.தமிழரசி, திருமதி.ப.கலைச்செல்வி ஆகியோர் இடைநிலை ஆசிரியர் பதவியில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து, முறையான பணப்பயன் வழங்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்பாணைக்கு உட்பட்டு அவர்கள், தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

    வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்கள் பெயர் சேர்ப்பு

    பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கல்லுாரிகளில், 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏழு கல்லுாரிகளில், இப்பணி 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.

    தபால் ஓட்டுக்களை விரைவாக அனுப்புங்க: எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்

    தேர்தல் பணி செல்லும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தேர்தலின்போது ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது, வாக்காளர்களுக்கு விரலில் மை வைப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். அரசு ஊழியர்களின் விவரங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே சேகரிக்கப்பட்டு தேர்தல் துறையால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.

    வரும் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ. 24 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்

    எதிர்வரும் கல்வி ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியில் 10 பள்ளிகளில் ரூ. 24 கோடியில் 12 ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட எஸ்.கே.சி. சாலை நடுநிலைப் பள்ளி, காவிரி சாலை நடுநிலைப் பள்ளி, காளைமாடு சிலை ஆசிரியர் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி, ஓடக்காட்டுவலசு மேல்நிலைப் பள்ளி, ஜவுளி நகர் நடுநிலைப் பள்ளி, பி.பி.அக்ரஹாரம் நடுநிலைப் பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜர்  மேல்நிலைப் பள்ளி, கருங்கல்பாளையம்  மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு ஆசிரியர் காலனி நடுநிலைப் பள்ளி ஆகிய 10 மாநகராட்சிப் பள்ளிகளில் வருகிற கல்வி ஆண்டு முதல் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

    இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிக வெப்பம்!

    இந்தியா முழுவதும் கோடை காலம் துவங்கி வெப்ப அலை வீசுவதால், இந்த கோடைகாலம் வழக்கத்தைவிட கடுமையானதாகியிருக்கிறது. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெயிலின் காரணமாக சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

    புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை, நிராகரிக்கும் கருவூல கணக்குத்துறை: பணப்பலன் பெறுவதில் சிக்கல்

    புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை, ஏதாவது ஒரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரிப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

    வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த 77 % மாணவர்கள் எம்சிஐ டெஸ்டில் பெயில்!!

    வெளிநாடுகளில் மருத்துவ டாக்டர்கள் பட்டம் படித்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் இங்கு நடந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) டெஸ்டில் தோல்வியுற்றுள்ளனர். 77 சதவீத மாணவர்கள் இந்த மருத்துவத் தேர்வில் தோல்வியுற்று இருப்பது எம்சிஐ அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பொது நுழைவுத் தேர்வுக்கான தடை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

    மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, பொது நுழைவுத் தேர்வுக்கான தடையை தொடர, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா, கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு கட்டாய தேர்தல் பணி: ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

    சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி பணிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணி நிரந்தரம் பெற்ற ஆசிரியர்களே, பல ஆண்டுகளாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.'இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களும், கட்டாயம் பணிக்கு வர வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். தேர்தல் பணியில், ஒவ்வொரு சிறப்பு ஆசிரியரும் கண்டிப்பாக ஈடுபட வேண்டும்; அதற்காக, அவர்களின் பெயர் பட்டியலை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

    ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.தொடக்கக்கல்வித் துறைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தலைநகரில் மேமாதம் கோடை விடுமுறையில் நடத்துவது வழக்கம்.

    இன்ஜி., விண்ணப்ப பதிவு இணையதளம் முடங்கியது

    அண்ணா பல்கலையில், முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட, இன்ஜி., 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவில், முதல் நாளிலேயே குளறுபடி ஏற்பட்டுள்ளது. இணையதளம் முடங்கியதால், மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலை மூலம், தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடக்கும். இந்த ஆண்டு முதல் விண்ணப்பம் வழங்கும் முறை, ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அ.தே.இ - மாண்புமிகு பிரதமரின் மதிப்புமிக்க பரிந்துரைகள் - "மான் கீ பாத்" நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

    ஆசிரியர்களின் பதவி உயர்வு விவகாரங்களில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம்

    அரசு ஊழியருக்கு பதவி உயர்வுக்கான விதிகளை உருவாக்குவது அரசின் உரிமை. அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2004 முதல் 2014 வரை பட்டதாரி ஆசிரியர்களாக நேரடியாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியராக இருந்து பதவி உயர்வு பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு தனியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்க வேண்டும்.

    தொடக்கக் கல்வி - ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள்

    1)மதிப்பெண் பதிவேடு
    2)தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
    3)மக்கள் தொகை சுருக்கம்
    4)5 குழந்தைகள் பெயர்ப்பட்டியல்

    பள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் 01.06.2016 (புதன்கிழமை) அன்று அனைத்து தொடக்க / நடுநிலை மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

    Friday, April 15, 2016

    Rajasthan Govt Announces 6% hike in Dearness Allowance (DA) for its Employees

    Nearly eight lakh employees and 3.5 lakh pensioners would be benefited by these Dearness Allowance (DA) hikes. Rajasthan government today announced six per cent hike in the Dearness Allowance (DA) of its employees. Dearness Relief (DR) for the pensioners has also been increased by six per cent. The DA hike would be effective from January 1, 2016, a release said.  The prevalent DA of the state government employees was 119 per cent and has been increased to 125 per cent of the basic pay. 

    அடுத்த 48 மணி நேரத்தில் கடும் வெயில்; நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்: வானிலை மையம்

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் (98.6 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை (105.8 டிகிரி பாரன்ஹீர் வரை) உயரக் கூடும். எனவே தமிழகத்தின் கடலோரா மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

    தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு கண்காணிப்பு வலையில் ஆசிரியர்கள்

    பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர், தி.மு.க., பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர். எனவே, அ.தி.மு.க., மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சார்பில், ஆசிரியர்களை கண்காணிக்க துவங்கியுள்ளனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    ஐ.ஐ.டி., என்.ஐ.டி., இரண்டும் சமம்!

    மத்திய அரசால், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.,) அதிக முக்கியத்துவம் பெற்று வந்தன! ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு, சமீபகாலமாக ஏராளமான கல்வி நிறுவனங்களை நிறுவின. தற்போது, ஐ.ஐ.டி.,களுக்கு இணையானதாக என்.ஐ.டி.,களை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, ஐ.ஐ.டி.,களை விடவும், அதிக நிதியை என்.ஐ.டி.,களுக்கு மத்திய அரசு வழங்கிவருகிறது!

    பள்ளிகளுக்கு குறைந்தபட்ச நில அளவு தமிழக அரசு எடுத்துள்ள இறுதி முடிவு என்ன? ஐகோர்ட்டு கேள்வி

    தனியார் பள்ளிகளுக்கு நிபுணர்கள் குழு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச நிலஅளவு தொடர்பாக அரசு எடுத்துள்ள இறுதி முடிவினை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சங்கச் செயலாளர் ஜோசப் சுந்தர்ராஜ். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் : தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க மறைமுக திட்டம்?

    தமிழகம் முழுவதும் நாளை துவங்க உள்ள, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களில், வாயில் கூட்டம் நடத்தி, துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க, ஆசிரியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. அதில், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் நிலை உள்ளதால், தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    பொதுத் தேர்வுகளுக்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்.

    அரசுப் பொதுத் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளை நீக்கும் வகையில், அதற்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.வினாத்தாள் குழப்பம்:பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி கடந்த 1-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 11-ஆம் தேதியும் நிறைவுபெற்றன. 

    வரும் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ. 24 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்

    எதிர் வரும் கல்வி ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியில் 10 பள்ளிகளில் ரூ. 24 கோடியில் 12 ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட எஸ்.கே.சி. சாலை நடுநிலைப் பள்ளி, காவிரி சாலை நடுநிலைப் பள்ளி, காளைமாடு சிலை ஆசிரியர் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி, ஓடக்காட்டுவலசு மேல்நிலைப் பள்ளி, ஜவுளி நகர் நடுநிலைப் பள்ளி, பி.பி.அக்ரஹாரம் நடுநிலைப் பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜர்  மேல்நிலைப் பள்ளி, கருங்கல்பாளையம்  மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு ஆசிரியர் காலனி நடுநிலைப் பள்ளி ஆகிய 10 மாநகராட்சிப் பள்ளிகளில் வருகிற கல்வி ஆண்டு முதல் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசிநாள்: ஆட்சியர் தகவல்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வெள்ளிக்கிழமை கடைசிநாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

    தேர்தல் மையங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    ஆசிரியர்களின் நலன் கருதி தேர்தல் மையங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, தமிழக தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

    Thursday, April 14, 2016

    திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய விருது

    புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்வி, சமுதாய மாற்றத்திற்கான செயல்திட்ட போட்டியில், திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட நீடாமங்கலம் காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த சமூக மாற்றத்துக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்க நிறுவனமான பிரமேரிக்கா சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில், பள்ளி மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகள், செயல்திட்டங்களைப் பாராட்டி, பதக்கம்- பரிசுகள் வழங்கப்படுகின்றன. புது தில்லியில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான போட்டியில் 4970 பள்ளிகள் கலந்துகொண்டன. 

    தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்; 30-வது ஆண்டு துர்முகி

    தமிழ் ஆண்டுகள் அறுபதில் 30வது ஆண்டு துர்முகி. இந்த ஆண்டுக்குரிய ராஜாவாக சுக்கிரனும், மந்திரியாக புதனும் ஆட்சி செய்வார்கள். இதனால் விவசாயம் சிறக்கும். நாடு சுபிட்சம் பெறும். கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்கும். மக்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வர். எல்லா உயிர்களும் குறைவின்றி வாழும். பெருமழை பெய்யும் என்று பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளது. 

    பி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்

    2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\tnea2016.edu என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

    பரோடா வங்கியில் 250 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் 250 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி மற்றும் கடன், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு, திட்டமிடல், இடர் மேலாண்மை, மனிதவள மேம்பாடு, பொருளாதார நிபுணர், சட்டம், டேட்டா சயின்டிஸ்ட், மென்பொருள் சோதனை, டேட்டா பேஸ் மேலாண்மை, டேட்டா அனலிஸ்ட் ஆகிய பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

    பள்ளிக்கல்வி - தேர்வுநிலை / சிறப்புநிலை மாதிரி செயல்முறைகள்

    தேவையற்ற புத்தகங்களை வாங்க நெருக்கடி? தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

    'தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களை தவிர, மற்ற புத்தகத்தை வாங்க, பெற்றோரை கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

    தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

    பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு, 45 நாட்கள் வரை பணி மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. அதில், கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெறாத இளநிலை உதவியாளர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பயிற்சி முகாம், மார்ச், 30ம் தேதி துவங்கியது. பயிற்சிக்கு பெயர் பட்டியல் அனுப்பிய, பல தலைமை ஆசிரியர்கள், பணியாளர்களை உரிய நேரத்தில் விடுவிக்காததால், பல பணியாளர்கள் பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை.

    Wednesday, April 13, 2016

    சர்க்கரை நோயாளிகளுக்கு ஊசி மருந்து: இனி வாரம் 1 முறையே போதும்

    சர்க்கரை நோயாளிகள் இனி வாரத்துக்கு ஒருமுறை ஊசி மருந்து போட்டுக் கொண்டால் போதும்.  இந்த மருந்தை "எலி லில்லி' என்ற அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நிறுவனத்தின் இந்தியத் தலைவர் எட்கார்ட் ஒலாய்úஸாலா, மருத்துவ இயக்குநர் டாக்டர் தருண் புரி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

    கைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை

    கைரேகை அழிந்த ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஓய்வூதியர்களுக்கு மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்காணல் நடக்கிறது. பங்கேற்க செல்வோர் ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இதுவரை ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ரேஷன்கார்டு சமர்ப்பிக்காதோர், அவற்றின் நகல்களை ஓய்வூதிய கொடுவை ஆணை எண்ணை குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

    டிசம்பர் மாத "நெட்" தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:

    10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 16ல் துவக்கம்

    தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ல் துவங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நேற்று முடிந்தது. தமிழ் அல்லாத பிறமொழி மாணவர்களுக்கு மட்டும், இன்று விருப்ப மொழி பாடத்தேர்வுடன், அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.

    'இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை'

    நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.

    கல்லூரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி ஏற்படும்

    பிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது. எனவே, வரும் கல்வி ஆண்டிலும் பி.காம்., 'சீட்'டுக்கு கல்லுாரிகளில் கடும் போட்டி இருக்கலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 'புளூ பிரின்ட்' அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டாலும், புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன. இதனால், கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த, முதல் பிரிவு மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகினர்.

    Tuesday, April 12, 2016

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2016 - திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கை முழு விவரம்

    மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த, 2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்

    நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டில், மருத்துவக் கல்லுாரிகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பணிவரன்முறை இன்றி ஊழியர் இறப்பு கருணைப் பணி கோர முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

    பணி வரன்முறை செய்யப்படாத ஊழியர்இறந்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    தேர்தலில் ஓட்டுப்போட வேண்டுமா? புதிய வாக்காளராக சேர இன்னும் 4 நாள் தான்...

    தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமை நடத்தி வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டு இந்த மாதம் 15ம் தேதி வரையிலும் 18 வயதை அடைந்த அனைத்து வாக்காளர்களும் புதிதாக தங்களது வாக்குகளை சேர்த்துகொள்ளலாம்.

    சேமிப்பை அதிகரிக்கும் வழிகள்!!!

    உங்கள் வரு­மா­னத்தின் ஒரு பகுதி சேமிப்­பாக இருக்க வேண்டும். ஆனால், செல­வுகள் அதி­க­ரிக்கும் சூழலில் இது மிகவும் கடினம் என பலர் நினைக்­கலாம். இதற்­காக சேமிப்பே சாத்­தி­ய­மில்லை என நினைக்க வேண்டாம். கொஞ்சம் மாற்றி யோசித்­தாலே போது­மா­னது. அதா­வது சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­க­ரிக்கும் வழி­களை கண்­ட­றிய வேண்டும். அதென்ன சேமிக்க கூடிய வருமானம்? வரு­மா­னத்தில் மொத்த வரு­மானம், கைக்கு வரும் வரு­மானம் என இருப்­பது போல, மாத செல­வுகள் போக மிஞ்சும் வரு­மானம் தான் சேமிக்க கூடிய வரு­மானம். இது தான் சேமிப்­பாக மாறு­கி­றது. ஆக அதிகம் சேமிக்க வேண்டும் என்றால் சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­க­மாக்க வேண்டும். இதற்கு செல­வு­களை குறைக்க வேண்டும். செல­வு­களை குறைக்க வழி­களை கண்­ட­றிய முடிந்தால் இப்­போ­தைய ஊதி­யத்­தி­லேயே சேமிப்­பது சாத்தியமாகும்.

    ஸ்டேட் வங்கியில் 17,140 பணியிடங்கள் தமிழகத்திற்கு 1541 இடங்கள்

    ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்து 140 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்திற்கு 1541 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:

    Monday, April 11, 2016

    JEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்.

    அடுத்த கல்வியாண்டு முதல், பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோர் மட்டுமே, ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்கான, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., தேர்வை எழுத முடியும்.தேசிய கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் நுழைவுத்தேர்வில், 25 ஆயிரத்துக்குள், 'ரேங்க்' எடுக்க வேண்டும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணை,40 சதவீதத்திற்கு கணக்கிட்டு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக மாற்றி சேர்ப்பார்கள்.

    நடத்தை விதிகள் தெரியுமா? யாரை பணியிட மாற்றம் செய்யலாம்...

    அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்தும் நடத்தை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் முடியும் வரை தேர்தலுடன் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்வது ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

    ஆசிரியர் வரைந்த ஓவியம் அரசு விளம்பரம் ஆனது: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தும் படைப்பு

    சமூகத்தின் வளர்ச்சி குறியீடு கல்வி. ஆனால் பொருளாதார, புறச் சூழல் களால் அடிப்படைக் கல்வி மறுக் கப்படும் குழந்தைகள் சிறு வயதி லேயே தொழிலாளர்களாக மாற்றப்படும் கொடுமை நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றி, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியறிவு வழங்க வேண்டுமென அரசு வலி யுறுத்தி வருகிறது.

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: 'கீ ஆன்சரால்' குழப்பம்.

    பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், மதிப்பெண் பதிவு மற்றும், இரண்டு முறை வழங்கப்பட்ட, 'கீ ஆன்சர்' எனப்படும் விடைக் குறிப்புகளால், குளறுபடி ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், மொழிப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து விட்டது. ஏப்., 7ல் முக்கிய பாடங்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. 

    திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி: உடனடியாக முழு மதுவிலக்கு

    * கல்வி, விவசாய கடன் ரத்து
    * ஆவின் பால் விலை குறைப்பு
    * ஒன்பது மாத பேறுகால விடுப்பு
    * விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
    * மாணவர்களுக்கு இலவச வைபை
    * ஏழைகளுக்கு அண்ணா உணவகம்

    திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உடனடியாக முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும். அதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகளுக்கு பயிர்கடன், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புக்களை திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் குறித்த அறிவிப்பால் ஒவ்வொரு வீடுகளுக்கும் மின் கட்டணம் பாதியாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது?

    தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகங்கம் மே முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வ மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தன.

    கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய "ஸ்மார்ட் ரேஷன் கார்டு'

    "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' என்னும் புதிய முயற்சியை சென்னை ராமாபுரத்திலுள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் கே.எம். ஆனந்த்குமார் கூறியதாவது:

    Sunday, April 10, 2016

    த.அ.உ.சட்டம் 2005 - தேர்வுநிலை /சிறப்புநிலை மற்றும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சரி செய்வது சார்பான அரசாணைகளின் விபரம்

    பள்ளி ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் பயிற்சி: கல்வித் தரத்தை உயர்த்த டெல்லி அரசு அதிரடி

    அரசுப் பள்ளிகளில் ஆசியர்களாக பணியாற்றுபவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி அளிக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு தீர்மானித்துள்ளது.

    அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்று திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற கல்விக் கோரிக்கைகள் விளக்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    விடுப்பு - மகப்பேறு விடுப்பு - முறையாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுப்பு அளித்தல் சார்பான உத்தரவு

    தேர்தல் அலுவலருக்கு பயிற்சி 24ல் துவங்குகிறது

    தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, 24ல் துவங்குகிறது; மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என, 11 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

    தமிழக பல்கலை வரலாற்றில் புது முயற்சி: விரைவில் 'ஆன்லைன்' தேர்வு நடத்த திட்டம்

    தமிழக பல்கலைகளில் முதல்முறையாக, 'ஆன்லைன்' தேர்வு முறையை, சென்னை பல்கலை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான திட்டத்தை சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் அறிவித்துள்ளார்.

    அகவிலைப்படி உயர்வு அறிவிக்கை வெளியீடு

    மத்திய அரசு ஊழியர்களுக்கு, 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க, கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான முறையான அறிவிப்பை, நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, 119 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை, 125 சதவீதமாக உயர்த்துவது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    Friday, April 8, 2016

    இந்த தமிழனையும் தெரிந்துகொள்ளுங்கள்... கல்யாணசுந்தரம்

    45 வருடங்களாக சமூக சேவை செய்து வருபவர், 30 வருடங்களாக நூலக பொறுப்பாளராக இருந்து, உலகத்திலே தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு ஒதுக்கும் ஒரே நபர் இவர் மட்டும் தான். தன் தேவைக்காக உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்.

    பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற குறிப்புகள்

    TIPS TO GET FULL SCORE IN SSLC SOCIAL SCIENCE CLICK HERE...

    YOURS VAAZHGA VALAMUDAN
    B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)
    GRADUATE TEACHER
    GHS GANGALERI 635 122
    KRISHNAGIRI - DT
    CELL : 99943-94610

    "குறுஞ்செய்தி மூலம் வாக்குச்சாவடியில் காத்திருப்போர் விவரம் அளிக்க ஏற்பாடு"

    செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பினால் வாக்குச்சாவடியில் காத்திருப்போர் விவரம் தெரிவிக்கப்படும் என தேவகோட்டை வட்டாட்சியர் தெரிவித்தார்.

    த.அ.உ.சட்டம் 2005 - சேலம் விநாயக மிஷன் பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து பாடங்களும் அரசுப் பணிக்கு தகுதி பெறுகிறது என தகவல்

    வாட்ஸ் ஆப்பில் பாதுகாப்பாக செய்திகளை அனுப்பும் வசதி அறிமுகம்

    வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் செய்திகளை பெருநாரை தவிர வேறு யாரும் பார்க்கமுடியாதபடி வசதி செய்யப்பட்டுள்ளது. நாம் நம் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களையோ அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ்களையோ, இனி நாம், நம் நண்பர்கள் அல்லது க்ரூப்பில் உள்ளவர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது. ஏன்! வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது.

    தொடக்கக் கல்வி - 2011-12ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 1581 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் 31.12.2016 வரை தொடர் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவு


    GOI - PAYMENT OF DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVT. EMPLOYEES - REVISED TO 125% FROM 119% EFFECT FROM 01.01.2016

    தேர்தலுக்கு பின் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'ஆதார்' அட்டை நகல் வாங்க முடிவு

    சட்டசபை தேர்தல் முடிந்ததும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கு வதற்காக மக்களிடம் இருந்து 'ஆதார்' அட்டை நகலை வாங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அவற்றில் உள்தாள் ஒட்டப்பட்டு செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல முறைகேடுகள் நடக்கின்றன. இதை தடுக்க கண், விரல் ரேகை மற்றும் புகைப்படத்துடன் கூடிய 'ஸ்மார்ட்' வடிவில் ரேஷன் கார்டு வழங்க உணவு துறை முடிவு செய்தது.

    'சென்டம்' குறைவதால் இன்ஜி.,க்கு கடும் போட்டி?தொழிற்கல்வி மாணவர்கள் முந்த வாய்ப்பு

    பிளஸ் 2 கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை மற்றும் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் எண்ணிக்கை சரியும் என்பதால், தொழிற்கல்வி மாணவர்கள், இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், முன்னணி பெற வாய்ப்புள்ளது.

    3 பாடங்களுக்கு 'போனஸ் மார்க்'

    பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு, மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு உள்ளன.

    TNPSC BULLETIN (EXTRAORDINARY) SECOND CLASS LANGUAGE TEST (FULL TEST) PART ‘A’ WRITTEN EXAMINATION AND VIVA VOCE PARTS ‘B’ ‘C’ AND ‘D’(TEST CODE NO.001)



    DEPARTMENTAL TEST BULLETIN


    Bulletin No.View/Download
    Bulletin No. 18 dated 16th August 2015(contains results of Departmental Examinations, May 2015)View
    Bulletin No. 17 dated 7th August 2015 - Extraordinary(contains results of Departmental Examinations, May 2015)View
    Bulletin No. 7 dated 16th March 2015(contains results of Departmental Examinations, December 2014)View
    Bulletin No. 6 dated 7th March 2015 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2014)View