நாடு முழுவதும் தரமான கல்வி தருவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தனது 19-வது 'மன் கி பாத்' வானொலி உரையின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
பிரதமர் தமது உரையில் ஒவ்வொரு அரசாங்கமும் தமது சொந்த வழியில் நாட்டில் கல்வி மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்.
"இதுவரை, அரசாங்கம் நாடு முழுவதும் கல்வி மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் தற்போது தரமான கல்வி தருவதில் கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.
இப்போது பள்ளிகளில் குழந்தைகளுக்கு தரமான கல்வி, கற்றல் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். மேலும், தரமான கல்வி வழங்குவதில் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது என்றார் மோடி.
No comments:
Post a Comment