Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 30, 2016

    கோரிக்கைகளை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்!

    மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, ஏற்கனவே திட்டமிட்டபடி, மே, 1ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்; இதில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது, என, சுப்ரீம் கோர்ட் உறுதியாக தெரிவித்தது.


    நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் , இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய நுழைவுத் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.


    ஏற்கனவே, ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும் அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை, மே, 1ல் நடத்த திட்டமிட்டிருந்தோம். அதையே, என்.இ.இ.டி., எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கான முதல்கட்டமாக எடுத்துக் கொள்ளலாம். ஜூலை, 24ல், இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட் ஏற்றது. அதன்படி, மே, 1 மற்றும், ஜூலை, 24ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று தன் தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட், நேற்று முன்தினம் கூறியிருந்தது.

    ஒரே கட்டமாக: 

    இந்த நிலையில், நீதிபதிகள் அனில் தவே, ஏ.கே.கோயல் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வில், மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, நேற்று, புதிய கோரிக்கையை முன்வைத்தார். முகுல் ரோஹத்கி கூறியதாவது:

    இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்துவது, மாணவர்கள், மாநிலங்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், மே, 1ல் திட்டமிட்ட அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதற்கும், ஜூலை, 24ல், ஒரே கட்டமாக நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்.

    பாரபட்சம்: 

    அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும். அதே நேரத்தில் தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வு, ஆங்கிலம் மற்றும், ஆறு மாநில மொழிகளில் நடத்தப்படும். இது, மாணவர்கள் இடையே பாரபட்சம் காட்டுவதாக அமைந்துவிடும்.

    ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள், மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தி முடித்துள்ளன; மஹாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா மாநிலங்களில், அடுத்த சில நாட்களில் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. அதனால், மாநிலங்கள் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேச மாநில வழக்கறிஞர்களும், மே, 1ல், திட்டமிட்டுள்ள தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    வாய்ப்பு தரப்படும்: 

    மாலையில் மீண்டும் கோர்ட் கூடியபோது, நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் கூறியதாவது:

    ஏற்கனவே திட்டமிட்டபடி, மே, 1ல், நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். நுழைவுத் தேர்வு நடத்துவதில் பிரச்னை இருப்பதாக கூறுபவர்கள், மனுவை தாக்கல் செய்யலாம். மே, 3ல், அது குறித்து விசாரித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    பழைய முறையில் சேர்க்கை: 

    வரும் கல்வி ஆண்டில், மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே 1, ஜூலை, 24ல், தேர்வு நடக்கும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் நலன் கருதி, சட்ட ரீதியாக, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வழி வகை செய்ய வேண்டும்.சிறப்பு அனுமதி பெற, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் .எஸ்.தாமோதரன் இந்திய மருத்துவர் சங்க தமிழக பிரிவு தலைவர் 

    மீண்டும் குழப்பம்: 

    நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், மே, 1ல், ஏற்கனவே திட்டமிட்டபடி, அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வையும், ஜூலை, 24ல், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வையும் நடத்த அனுமதி அளித்துள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள், தனியார் மருத்துவக் கல்லுாரிகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் எதிர்ப்பை நிராகரித்து சுப்ரீம் கோர்ட் இவ்வாறு தீர்ப்பளித்தது. நேற்று முன்தினம் தேர்வை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக கூறிய மத்திய அரசு, நேற்று திடீரென, தீர்ப்பில் திருத்த வேண்டும் என்று கோரியுள்ளது. 

    மே, 1ல் திட்டமிட்ட அனைத்திந்திய நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். யாருக்காவது எதிர்ப்பு இருந்தால், மே, 3ல், அது குறித்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நேற்று கூறியுள்ளது.

    தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் சுப்ரீம் கோர்ட் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், ஜூலை, 24ல், தேர்வை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யுமா அல்லது வேறு புதிய உத்தரவு பிறப்பிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது, நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    No comments: