அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பான தீர்ப்பை இன்று வெளியிட்டது உச்சநீதிமன்றம்.
அதில், அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு வரும் மே 1ம் தேதி முதல்கட்டத் தேர்வு நடத்தவும், ஜூலை 24ம் தேதிஇரண்டாம் கட்ட தேர்வு நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியிடப்பட வேண்டும் என்றும், செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
No comments:
Post a Comment