2016ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, கல்வி ஓர் பார்வை
சாத்தியம்:
மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு நிகராக அரசு பள்ளிகளின் தகுதியை மேம்படுத்த கல்வி முறை சீரமைக்கப்படும்.
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை, மத்திய அரசுக்கு இணையான பாடத்திட்டமாக தரம் உயர்த்தலாம்.
கல்வி நிறுவனங்களை நடத்துவதில் எந்த மத பாகுபாடின்றி, அனைத்து மதத்தினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.அரசு கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டும்.
சாத்தியமில்லை:
அரசு பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி கொண்டு வரப்படும்.
மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கவே இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாணவர்கள் பிறமொழிகளில் படிக்க விரும்பினால், அவர்களுக்கு பள்ளிகளில் தனி வகுப்புகள் நடத்தக்கூடிய வசதிகள் செய்யப்படும்.
தற்போது இருக்கும் பாட வகுப்புகளுக்கே, ஆசிரியர்கள், வகுப்பறைகள், உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை.
பழங்கஞ்சி:
அரசு பள்ளிகளின் தரம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதனை முறைகள் மேம்படுத்தப்படும்.
எல்லா கட்சிகளும் அளிக்கும் வாக்குறுதி.
தமிழகத்தில் தரமான கல்வி வழங்க, 62 நவோதயா பள்ளிகளை துவங்க அறிவித்துள்ளது. விருப்பு, வெறுப்பு காரணமாக அதற்கு தமிழக அரசு முயற்சி எடுக்கவில்லை. எனவே, மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகள் துவங்கப்படும். பல ஆண்டுகளாக இது அறிவிப்பாகவே உள்ளது.
No comments:
Post a Comment