Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 30, 2016

    தமிழகத்தில் 5.82 கோடி வாக்காளர் ஆண்களை விட பெண்கள் அதிகம்

    தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்குமான, துணை வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில், 5.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2011 சட்டசபை தேர்தலை விட, 1.11 கோடி வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நேற்று துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இனி தேர்தல் வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க முடியாது. இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 20ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின், இரண்டு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 


    முகாமில் ஏராளமானோர் விண்ணப்பம் கொடுத்தனர். ஆன்லைனிலும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அவற்றில் தகுதியான நபர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. துணை வாக்காளர் பட்டியலையும் சேர்த்து, தமிழகத்தில் தற்போது, 2.88 கோடி ஆண்கள்; 2.93 கோடி பெண்கள்; 4,720 திருநங்கையா் என மொத்தம், 5.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஜன., 20ம் தேதி வெளியிடப்பட்ட, இறுதி வாக்காளர் பட்டியலின்போது, 5.79 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது கூடுதலாக, 2.86 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த 2011 சட்டசபை தேர்தலின்போது, 4.70 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதை விட தற்போது, 1.11 கோடி வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி, காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லுார் தொகுதி. இங்கு, 6.02 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதி, நாகை மாவட்டம், கீழ்வேளூர். இங்கு, 1.63 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிக பெண்கள் உள்ள தொகுதியில், கரூர் முதலிடம் வகிக்கிறது. ஆயிரம் ஆண் வாக்காளர்களுக்கு, 1,083 பெண் வாக்காளர்கள் உள்ளனர். மதுரை மேற்கு தொகுதியில், 1,000 ஆண்களுக்கு, 1,012 பெண்கள் உள்ளனர்.

    திருநங்கையர் அதிகம் உள்ளதொகுதி, திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல். இங்கு, 127 திருநங்கைகள், வாக்காளர்களாக உள்ளனர்.

    வயது வாரியாக வாக்காளர்கள்
    வயது வாக்காளர்கள் 
    எண்ணிக்கை
    18 - 19 21,05,344
    20 - 29 1,17,76,288
    30 - 39 1,39,83,613
    40 - 49 1,24,89,260
    50 - 59 87,32,151
    60 - 69 56,15,630
    70 - 79 26,58,699
    80க்கு மேல் 8,40,635
    மொத்தம் 5,82,01,620

    No comments: