தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இரண்டாண்டு இலவச பயிற்சி வகுப்பில் படித்த 30 மாணவர்கள் இணை நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற்றனர். இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் இணை நுழைவுத் தேர்வுக்குரிய இரண்டாண்டு இலவசப் பயிற்சி வகுப்பு "சூப்பர் 30' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாஸ்த்ரா பல்கலை. நடத்திய தொடக்க நிலை நுழைவுத்தேர்வின் மூலம் முதல் 30 மாணவர்கள் இரண்டாண்டு இலவசப் பயிற்சி வகுப்புக்குத் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் இலவச இணை நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். 2014-ல் சுமார் 800 மாணவர்கள் சாஸ்த்ரா நடத்திய முதல் நிலை நுழைவுத்தேர்வை எழுதினர். இதில், சூப்பர் 30 மாணவர்கள்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரு ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்பட்டது. மேலும், இலவச உணவு, தங்கும் வசதி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.
இவர்களில் இணை நுழைவுத் தேர்வில் 19 மாணவர்கள் உயர்நிலை எழுதத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருச்சி மான்ட்போர்டு பள்ளியைச் சேர்ந்த எஸ். ஹரீஷ் 192 மதிப்பெண்களும், பெனிடிக்ட் ப்ளாரன்ஸ் 171 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தவிர, 11 மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற போதிலும் 2016-க்கான உயர்நிலைத் தேர்வை எழுதும் தகுதியைப் பெறவில்லை.
இணை நுழைவுத் தேர்வு இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.), பொறியியல் கல்லூரிகள் மற்றும் சாஸ்த்ரா பல்கலை போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்வதற்கு இது வழிவகுக்கிறது. இணை நுழைவுத் தேர்வு பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவே சாஸ்த்ரா பல்கலை ஆண்டுதோறும் ரூ. 45 லட்சம் செலவிடுகிறது. கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கல்விப்பணியை சாஸ்த்ரா பல்கலை. செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment