Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 29, 2016

    குறைந்த விலைக்கு ஸ்மார்ட் போன் சாத்தியமா?

    டாகோஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் 888 ரூபாய்க்கு ஸ்மார்ட் போனை விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபீரிடம்-251 என்னும் ஸ்மார்ட் போன் 251 ரூபாய்க்கு விற்கப்படும் என விளம்பரம் செய்தது. இதற்காக இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் பலர் முன் பதிவு செய்தனர். முன்பதிவு செய்யும் போது இணையதளம் இயங்காமல் போனதால் அந்நிறுவனம் குறித்து மக்களிடையே பல சந்தேகங்கள் ஏற்பட்டது.
    ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மோசடி நிறுவனம் என பாஜக அரசியல் தலைவர் ஒருவர் வழக்கு பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஃபீரிடம்-251 ஸ்மார்ட் போன்கள் வருகின்ற மே மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் Docoss Multimedia என்னும் நிறுவனம் 888 ரூபாய்க்கு ஸ்மார்ட் போனை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு வருகின்ற 29ம் தேதி (நாளை) முதல் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. ஆனால் ஸ்மார்ட் போனை வாடிக்கையாளர்களிடம் வழங்கும் போது மட்டுமே அதற்கான பணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    முன்பதிவு தொடங்கப்பட்ட நான்கு நாட்கள் கழித்து மே மாதம் 2ம் தேதி இந்த ஸ்மார்ட் போன்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
    ஆனால் இந்த நிறுவனத்திற்குரிய இணையதளம் இன்னும் செயல்படவில்லை மேலும் இந்த நிறுவனம் குறிப்பிட்டு இருக்கும் கால்செண்டர்களுக்கான எண்களும் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலும் கடந்த மார்ச் மாதம் தான் இந்த நிறுவனம் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தை போன்றே டாக்கோஸ் மல்டிமீடியா நிறுவனத்தின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments: