தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை, மத்திய அரசு, மீண்டும் 8.8 சதவீதமாக உயர்த்தியது.இ.பி.எப்., வட்டி விகிதத்தை, 2015 - 16ம் நிதியாண்டுக்கு, 8.8 சதவீதமாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான மத்திய வாரியம் பரிந்துரைத்தது.ஆனால், அதற்கு மாறாக, இ.பி.எப்., தொகைக்கு 8.7 சதவீத வட்டியை மட்டும் வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சகம், சில நாட்களுக்கு முன், ஒப்புதல் அளித்தது.
இதனை கண்டித்து, நாடு முழுவதும் தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இதையடுத்து, இ.பி.எப்., வட்டியை, 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment