தமிழகம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க 7.5 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. இது குறித்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண் இயக்குநர் மைதிலி கே. ராஜேந்திரன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உரிய பாடத் திட்டத்தை சிபிஎஸ்இ வழங்கி விடும்; தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் மூலம் 7.5 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய மூன்று மையங்களில் புத்தகங்களை பள்ளி நிர்வாகங்கள் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனத்தின் இணையதளத்தில் ஆன்லைனிலும் பதிவு செய்யலாம்.
1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை...: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான புத்தக விநியோகம் இந்த மாத இறுதியில் தொடங்கும். தங்களின் தேவைக்கேற்ப புத்தகங்களின் எண்ணிக்கையை பள்ளி நிர்வாகங்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இ-சேவை மையங்களுக்கு மாணவர்களிடையே வரவேற்பு: கடந்த ஆண்டு முன்மாதிரி திட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பொது இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அதில் ஏற்பட்ட குறைகள் முற்றிலும் களையப்பட்டு, இந்த ஆண்டு அனைத்துத் தாலுகாக்களிலும் உள்ள அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் பொது இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைன் சேவை வழங்கப்படும். புத்தகங்களின் இருப்பு குறித்து அறிந்த பிறகு,
பள்ளி நிர்வாகங்கள், மாணவர்கள் புத்தகங்களுக்கு உரிய தொகையைச் செலுத்தலாம் என்றார் அவர்.
No comments:
Post a Comment