புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கான அடையாள அட்டையை கட்டாயம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்றார் மாவட்டத் தேர்தல் அலுவலர் சு. கணேஷ். சட்டப்பேரவைத் தோóதலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனு பெறும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக புதுகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:
தோóதல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோóதலுக்கு வெள்ளிக்கிழமை முதல் (ஏப். 22) வரும் 29-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. தோóதல் நடத்தும் அலுவலர் தலைமையில் ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்கள் பெறப்படும். விடுமுறை நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படாது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, 100 மீட்டருக்கு முன் வாகனத்தை நிறுத்திவிட வேண்டும்.
வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனு தாக்கல் நடைபெறும் வளாகத்தில் தனிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. அலுவலர்கள், பணியாளர்கள் பணி மேற்கொள்ளும் நேரத்தில் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும். பொது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வேட்புமனுவுடன் ரூ. 10 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உரிய சாதிச்சான்றுடன் வேட்புமனு, ரூ. 5 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நிறைவு நாளின் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபர்களை அனுமதித்து பதிவு செய்ய வேண்டும். 3 மணிக்கு மேல் வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்களைப் பெறக்கூடாது என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சு. மாரிமுத்து, தோóதல் நடத்தும் அலுவலர்கள் எஸ்.பி. அம்ரித் (புதுக்கோட்டை), மு. வடிவேல்பிரபு (விராலிமலை), ரா. ரம்யாதேவி (அறந்தாங்கி), ஜெயபாரதி (ஆலங்குடி), செல்வராஜ் (கந்தர்வகோட்டை), சூரியகலா (திருமயம்), வட்டாட்சியர் (தோóதல்) தவச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment