அச்சுறுத்தலை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.பணப்பட்டுவாடா,தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களை மாவட்டத் தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரடியாக சென்று விசாரிக்கின்றனர். பாதுகாப்பின்றி செல்லும் அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
இதையடுத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.சமீபத்தில் சிவகங்கையில் பணப்பட்டுவாடாவை படமெடுத்த தேர்தல் நடத்தும் அலுவலர் அரவிந்தனை சிலர் தாக்க முற்பட்டனர். அதேபோல் தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுப்பதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதையடுத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளை போன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியலை மாவட்ட எஸ்.பி.,களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment