வெளிநாடுகளில் மருத்துவ டாக்டர்கள் பட்டம் படித்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் இங்கு நடந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) டெஸ்டில் தோல்வியுற்றுள்ளனர். 77 சதவீத மாணவர்கள் இந்த மருத்துவத் தேர்வில் தோல்வியுற்று இருப்பது எம்சிஐ அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பு படித்தாலும் இந்தியாவில் டாக்டர்களாக தொழில் செய்ய வேண்டுமென்றால் எம்சிஐ நடத்தும் தேர்வில் வெற்றி பெறவேண்டும். அவ்வாறு எம்சிஐ நடத்திய தேர்வுகளில் 77 சதவீத வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த மாணவர்கள் பெயிலாகியுள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளில் நடந்தத் தேர்வு முடிவுகளாகும் இது. இந்தத் தேர்வை எம்சிஐ, நேஷனல் போர்ட் ஆஃப் எக்ஸாமினேஷன்ஸ் (என்பிஇ) உதவியுடன் நடத்துகிறது. தற்போது என்பிஇ கொடுத்த புள்ளி விவரங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு முதல் தேர்வு எழுதியவர்களில் 77 சதவீதம் பேர் தோல்வியுற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டு நடக்கும் தேர்விலும் 10 முதல் 20 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். 2008-ம் ஆண்டு நடந்தத் தேர்வில் 58.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2014-ம் ஆண்டு நடந்த 2 தேர்வுகளில் முறையே 10.4, 11.4 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி கண்டுள்ளனர்.
No comments:
Post a Comment