செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பினால் வாக்குச்சாவடியில் காத்திருப்போர் விவரம் தெரிவிக்கப்படும் என தேவகோட்டை வட்டாட்சியர் தெரிவித்தார்.
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 100 சதவீத வாக்களிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தேவகோட்டை வட்டாட்சியர் மங்களேஸ்வரி தலைமை வகித்துப் பேசியது: தேர்தலில் வாக்களிக்குமாறு மாணவர்கள் தங்கள் பெற்றோரிடமும், வாக்களிக்கும் தகுதியுடைய மற்றவர்களிடமும் கூறவேண்டும். வாக்களிக்க வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. 1950 என்ற என்னுடன் ண என்ற எழுத்தையும், வாக்கு சாவடி எண்ணையும் டைப் செய்து செல்லிடப்பேசி வழியாக குறுஞ்செய்தி அனுப்பினால் வாக்கு சாவடியில் வரிசையில் எத்தனை பேர் உள்ளனர் என தெரிவிக்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளை அழைத்துச்செல்ல தேர்தல் ஆணையமே வாகனம் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது. இதில் மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நாடகம், கும்மிப் பாட்டு, ஆங்கிலம், தமிழ் சொற்பொழிவு நடைபெற்றன. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை தேர்தல் துணை வட்டாட்சியர் சேது நம்பு, வருவாய் ஆய்வாளர் மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் உதவியாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் சந்திர சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment