பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர், தி.மு.க., பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர். எனவே, அ.தி.மு.க., மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சார்பில், ஆசிரியர்களை கண்காணிக்க துவங்கியுள்ளனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 'ஜாக்டோ, ஜாக்டா' என போராட்டம் நடத்திய ஆசிரியர் சங்கங்கள், பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைப் படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றன.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும்' என, அறிவித்துள்ளதால், ஆசிரியர் சங்கங்கள் உற்சாகத்தில் உள்ளன. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொது செயலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை யில், 'தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகளை, 'சூப்பர்' கதாநாயகனாகவே பார்க்கிறோம்' என, கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் பாலகிருஷ்ணன் வெளி யிட்ட அறிவிப்பில், 'தி.மு.க., தேர்தல் அறிக்கை ஆசிரியர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி யுள் ளது' என, கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ் குமார் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக பள்ளி களில்பணிபுரியும், 19 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரி யர்கள், கலை, ஓவிய, இசை மற்றும் கணினி ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என தி.மு.க., அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்' என, கூறப் பட்டுஉள்ளது.இப்படி பல ஆசிரியர் சங்கங்கள், தி.மு.க., தேர்தல் அறிக்கையைபாராட்டியுள்ளதால், தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர், தி.மு.க., பிர முகர்களை நேரில் சந்தித்தும், கடிதம் மூலமும் நன்றி தெரிவிக்க தயாராகி உள்ளனர். எதிர்தரப்பு சங்கத்தினர், அ.தி.மு.க., முக்கிய பிரமுகர் களுக்கு, தி.மு.க., ஆதரவு ஆசிரியர் சங்கங் களின் பட்டியலை தெரிவித்துள்ளனர். அதனால், கல்வித்துறை அதிகாரிகள், உளவுத் துறை போலீஸ் மற்றும் அ.தி.மு.க., வினர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க துவங்கி உள்ளனர்.
No comments:
Post a Comment