Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 12, 2016

    சேமிப்பை அதிகரிக்கும் வழிகள்!!!

    உங்கள் வரு­மா­னத்தின் ஒரு பகுதி சேமிப்­பாக இருக்க வேண்டும். ஆனால், செல­வுகள் அதி­க­ரிக்கும் சூழலில் இது மிகவும் கடினம் என பலர் நினைக்­கலாம். இதற்­காக சேமிப்பே சாத்­தி­ய­மில்லை என நினைக்க வேண்டாம். கொஞ்சம் மாற்றி யோசித்­தாலே போது­மா­னது. அதா­வது சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­க­ரிக்கும் வழி­களை கண்­ட­றிய வேண்டும். அதென்ன சேமிக்க கூடிய வருமானம்? வரு­மா­னத்தில் மொத்த வரு­மானம், கைக்கு வரும் வரு­மானம் என இருப்­பது போல, மாத செல­வுகள் போக மிஞ்சும் வரு­மானம் தான் சேமிக்க கூடிய வரு­மானம். இது தான் சேமிப்­பாக மாறு­கி­றது. ஆக அதிகம் சேமிக்க வேண்டும் என்றால் சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­க­மாக்க வேண்டும். இதற்கு செல­வு­களை குறைக்க வேண்டும். செல­வு­களை குறைக்க வழி­களை கண்­ட­றிய முடிந்தால் இப்­போ­தைய ஊதி­யத்­தி­லேயே சேமிப்­பது சாத்தியமாகும்.

    வரிகள் பலவிதம்வரு­மான வரி, சொத்து வரி, சேவை வரி என பல­வி­த­மான வரி­களை நாம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது. இவை தவிர கலால் வரி, மூல­தன ஆதாய வரி, வாட் வரி உள்­ளிட்ட வரி விதிப்­பு­களும் இருக்­கின்­றன. இவற்றில் ஒரு சில வரிகள் பர­வ­லாக அறி­யப்­ப­டாமல் இருப்­ப­தோடு, எந்த வரி எதற்­காக வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது என்­பதும் புரி­யாமல் இருக்­கலாம். மேலும் வரி வசூ­லிக்கும் அமைப்பு தொடர்­பான குழப்­பமும் இருக்­கலாம். இந்­தி­யாவில் செலுத்­தப்­பட வேண்­டிய வரிகள் மற்றும் அவற்றின் தன்மை பற்றி ஒரு பார்வை;
    இரு வகை வரிகள்பொது­வாக வரிகள் இரண்டு வகைப்­படும். நேரடி வரி மற்றும் மறை­முக வரி என இவை குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. நேர­டி­யாக அரசு அல்­லது அரசு அமைப்­புக்கு செலுத்­தப்­படும் வரி நேரடி வரி என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. வரு­மான வரி இதற்­கான உதா­ரணம். வரி செலுத்­து­ப­வரை அதிகம் பாதிப்­பதும் நேரடி வரி தான். உற்­பத்­தி­யா­ளர்கள் அல்­லது இடைப்­பட்ட அமைப்­புகள் மூலம் அரசால் வசூ­லி­கப்­படும் வரிகள் மறை­முக வரிகள் என குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. இந்த வரிகள் நுகர்­வோ­ரிடம் இருந்து பெறப்­பட்டு அர­சுக்கு செலுத்­தப்­ப­டு­கின்றன். சேவை வரி இதற்­கான உதா­ரணம். ஏ.சி., ரெஸ்­டாரண்ட் போன்­ற­வற்றில் பெறப்­படும் சேவை வரி அர­சுக்கு செலுத்­தப்­ப­டு­கி­றது.
    முக்­கிய வரிகள்வரு­மான வரி; தனி­நபர் அல்­லது வர்த்­தக நிறு­வ­னங்கள் வரு­மா­னம் மீது செலுத்தும் வரி.வரு­மான வரிக்­கான வரு­மானம் ஐந்து வகை­யான பிரிக்­கப்­ப­டு­கி­றது; ஊதியம், வீட்டு வாடகை, வர்த்­தக வரு­மானம், மூல­தன ஆதாயம் மற்றும் வைப்பு நிதி வட்டி போன்­ற இதர வரு­மானம்.வாட் வரி: மாநி­லத்தில் விற்­கப்­படும் பொருட்கள் மீது மாநில அரசு விதிக்கும் வரி.சேவை வரி: 1994 முதல் சேவைகள் மீது விதிக்­கப்­படும் வரி. கலால் வரி: உற்­பத்தி செய்­யப்­படும் பொருட்கள் மீது விதிக்­கப்­படும் வரி.சுங்க வரி: இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீதான வரிதொழில்­முறை வரி: ஊழி­யர், ஒரு சில தொழில் வல்­லு­னர்கள் மீது மாநில அரசு விதிக்கும் வரி. மூல­தன ஆதாய வரி: சொத்து, வாகனம், நகைகள், நிலம், பத்­தி­ரங்கள் போன்­ற­வற்றை விற்­பனை செய்யும் போது அதன் ஆதாயம் மீது விதிக்­கப்­படும் வரி.பொழு­து­போக்கு வரி: சினிமா மற்றும் இதர பொழு­து­போக்கு டிக்­கெட்கள் மீது விதிக்­கப்­படும் வரி.முத்­திரை தாள் கட்­டணம்: பத்­திர பதிவு போன்­ற­வற்றின் போது செலுத்­தப்­ப­டு­வது. சொத்து வரி: உள்­ளாட்சி அமைப்பால் ஆண்­டு­தோறும் வீட்டு உரி­மை­யா­ள­ரிடம் இருந்து பெறப்­ப­டு­வது.
    மத்­திய, மாநில வரிகள்இந்­தி­யாவில் விதிக்­கப்­படும் வரிகள் பொது­வாக மத்­திய அரசு, மாநில அர­சுகள் மற்றும் உள்­ளாட்சி அமைப்­பு­களால் வசூ­லிக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு சில வரிகள் நேர­டி­யாக மத்­திய அர­சுக்கு செல்­கின்­றன. சில வரிகள் மாநில அர­சுக்கு செல்­கின்­றன. மத்­திய அரசு வரிகள்: வரு­மா­ன­ வரி, கலால் வரி, சேவை வரி, சுங்க வரி.மாநில அரசு வரிகள்:விற்­பனை வரி, வாட், பொழு­து­போக்கு வரி, டோல் கட்­டணம், தொழில்­முறை வரி, முத்­தி­ரைத்தாள் கட்­டணம், ஆடம்­பர வரி, ஆக்­டிராய் வரி, மூல­தன ஆதாய வரி.உள்­ளாட்சி அமைப்பு வரிகள்: சொத்து வரி.
    இதர வரிகள்இவை தவிர ஈவுத்­தொகை வினியோக வரி, டோல் கட்­டணம், ஆடம்­பர வரி, ஆக்­டிராய் வரி உள்­ளிட்­ட­வையும் பொருத்­த­மான இடங்­களில் வசூ­லிக்­கப்­ப­டு­கின்­றன.

    No comments: