’பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்2 துணைத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்,’ என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்2 துணைத்தேர்வு வரும் செப்., அக்., மாதங்களில் நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அரசு சேவை மையங்களான, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரிடையாக சென்று, விண்ணப்பிக்கலாம்.
மறுமுறை தேர்வு எழுதுவோர், ஒவ்வொரு பாடத்திற்கும், 50 ரூபாய் வீதம் தேர்வு கட்டணமும், அதனுடன் இதர கட்டணமாக, 35 ரூபாயும்; ’ஆன் லைன்’ பதிவு கட்டணம், 50 ரூபாயும் செலுத்த வேண்டும்.
நேரடி தனித்தேர்வர்கள், தேர்வு கட்டணம், 150 ரூபாய்; இதர கட்டணம், 35 ரூபாய்; கேட்டல், பேசுதல் திறன் தேர்வுக்கு இரண்டு ரூபாய் என மொத்தம், 187 ரூபாயும், ’ஆன் லைன்’ பதிவு கட்டணம், 50 ரூபாயும் செலுத்த வேண்டும். இத்தகவலை, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment