மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் ’நீட்’ தேர்வுக்கான பயிற்சியை மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் துவக்கி வைத்தார். ஈ.வெ.ரா., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சியை துவக்கி வைத்தும், பயிற்சிக்கான கையேட்டினை வழங்கியும் அவர் பேசியதாவது:
மாநகராட்சி பள்ளி மாணவர்களும் மருத்துவர்களாக உருவாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக இப்பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு படிக்கும் விருப்பமுள்ள மாணவர்களுக்காக தேர்வு நடத்தப்பட்டு தகுதி மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.
பிளஸ் 2 படிக்கும் 62 மாணவர்களுக்கு இப்பயிற்சியில் பங்கேற்பார்கள். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பின்தங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் 11ம் வகுப்பில் இருந்து பயிற்சி வழங்கப்படுகிறது.
360 டிகிரிஸ் அகாடமி பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்களால் இப்பயிற்சி வழங்கப்படும்.
வாரத்தில் மூன்று நாட்கள் காலை 6:00 மணி முதல் காலை 8:00 மணி வரை நடைபெறும். மாணவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை அனைத்து மாணவர்களும் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும், என்றார்.
கல்வி அலுவலர் செல்வராஜ் (பொறுப்பு), அகாடமி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், ராஜாமணி, சிவரூபன், பி.ஆர்.ஓ., சித்திரவேல், தலைமையாசிரியர்கள் கிருஷ்ணகுமாரி, எஸ்தர், ராஜேந்திரன், நடராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment