”நீட் தேர்ச்சி அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தும் மருத்துவ கல்லுாரிகளில் சேர முடியாமல் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தவிக்கின்றனர். தமிழக அரசின் மெத்தனத்தால் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு தள்ளி போனது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லுாரி மற்றும்பல்கலைகளில் படித்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் ”நீட் தேர்வு தேர்ச்சி அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்” என உத்தரவிட்டதை தொடர்ந்து, அவசரமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பங்கேற்று இடம் கிடைத்து சேர்க்கைக்கு செல்லும்போது, இடப்பெயர்ச்சி சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி மருத்துவ கல்லுாரிகள் கூறி வருகின்றன.
சான்றிதழுக்காக மாணவர்கள் அணுகும்போது, ”இளங்கலை முடித்த பிறகே, இடப்பெயர்ச்சி சான்றிதழ் வழங்க முடியும் என்ற நடைமுறை உள்ளது,” எனக் கூறி பல்கலை மற்றும் கல்லுாரி நிர்வாகங்கள் திருப்பி அனுப்புகின்றன. இதனால், எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் இடம் கிடைத்தும் அதில் சேர முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
மாணவர் ஒருவர் கூறும்போது, கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, பிளஸ் 2 முடித்தவுடன் இடப் பெயர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதை வைத்து கல்லுாரிகளில் சேர்ந்தோம். தற்போது நீட் தேர்ச்சி அடிப்படையில் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது. மருத்து கல்லுாரியில் சேர சென்றபோது, பயின்ற கல்லுாரி, பல்கலையிலிருந்து இடப்பெயர்ச்சி சான்றிதழ் வாங்கி வரும்படி கூறுகின்றனர்.
அவர்கள், மாற்று சான்றிதழ் மட்டுமே தர முடியும் என கூறுகின்றனர். தமிழக அரசு இதில் தலையிட்டு ’இடப்பெயர்ச்சி சான்றிதழ் தேவை இல்லை’ என அறிவிக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment