மதுரையில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் சார்பில் இடைநிலை அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி லேடி டோக் கல்லுாரியில் துவங்கியது.
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ரேச்சல் ரெஜி டேனியல் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் உதவி தொடக்க கல்வி அலுவலர் நமச்சிவாயம், ஆஷா (அறிவியல்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறிவியல் பாடத்தை எளிமையாக கற்பிக்கும் வகையிலான சிறப்பு பயிற்சி கையேடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.வேதியியல் துறை தலைவர் வசந்தா நன்றி கூறினார். செப்., 1 வரை இப்பயிற்சி நடக்கிறது.
No comments:
Post a Comment