தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் சம்பள விவகாரம் தொடர்பாக சென்னை சேப்பாக்கதில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
2016-ஆம் ஆண்டு ஜாக்டோ மற்றும் ஜியோ ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இது கூறப்பட்டு இருந்தது. இதேபோல கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டதால் தமிழக அரசு ஸ்தம்பித்தது.
அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வுசெய்ய கமிட்டி அமைக்கபட்டு ஒரு ஆண்டு ஆகியும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் மீண்டும் போராட்டம் அறிவிப்பது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் சங்கங்கள் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூடி முடிவு எடுத்தனர்.
அந்த ஆலோசனையில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். அமல்படுத்தும் வரை 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் நடத்துவது எனவும், ஜுலை 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டங்களூம், ஜூலை 18ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
பேரணிக்கான அனுமதி கோரி, சென்னை மாநகரக் காவல் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வது, எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துவதும், இடைப்பட்ட காலத்தில் இடைக்கால நிவாரணமாக 20 சதவிகித ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
சென்னை மன்றோ சிலையிலிருந்து தொடங்கி, தலைமைச்செயலத்தில் முடிவடையும் விதத்தில் பேரணிக்கான அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில், பேரணிக்கு ஏன் அனுமதி மறுக்கக்கூடாது எனக் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு காவல்துறை பதில் அனுப்பியது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து, இன்று காலை சென்னை, வாலாஜா சாலையிலுள்ள விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து சுமார் 3 இலட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். அங்கு தங்கள் கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் குவிந்ததால் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் அதிர்ந்தது.இதனால் எடப்பாடி அரசு மிரண்டு போய் உள்ளது என்பதே உண்மை.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் சென்னை திணறியது..
போக்குவரத்து ஸ்தம்பித்தது...
இன்று 5.8.2017 சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே CPS இரத்து செய்தல் உட்பட பல நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை எடுத்து கோரினர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அலைகடல் போல் திரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. எம்.ஜி.ஆர்&ஜெயலலிதா சமாதியில் திரண்ட போராட்டக்குழுவினரை சமாளிக்க முடியாமல் காவல்துறை திணறியது.
முன்னதாக இன்று கோட்டையை நோக்கி போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு ஊழியர்கள் நேற்று இரவு முதல் சென்னையை நோக்கி வர தொடங்கினார்கள்.அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் நிலையில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் வந்த வண்டிகளை காவல்துறை தடுத்து நிறுத்தியது.
காவல்துறையில் தடையை மீறி கோட்டையை முற்றுகையிட சென்னை சேப்பாக்கதில் பல்லாயிர கணக்கான அரசு ஊழியர்கள் ஒன்று கூடிகோஷமிட்டனர்.அரசு ஊழியர்கள் ஒன்று கூடியதால் சேப்பாக்கம் வழியாக செல்லும் சாலைகள் காலை முதலே ஸ்தம்பித்து இருக்கிறது.போராட்டத்திற்கு வருபவர்கள் காவல்துறை கைது செய்வதை முக.ஸ்டாலின்,ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment