Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 28, 2017

    நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்

    ''மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 68, தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலையில் நடந்த, 'புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.


    ஒப்பந்தம்
    மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

    வேளாண்மைக்கும், உற்பத்திக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறி விட்டு, வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் அனுமதிப்பது ஏன்?

    சர்வதேச வர்த்தக அமைப்பில் நாம் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்தியாவில் தேவைக்கு அதிக உற்பத்தி உள்ளதால், அதை, நாம் ஏற்றுமதி செய்கிறோம். வெளிநாட்டு பொருட்களின் இறக்குமதியை தடை செய்தால், நம் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. மேலும், சர்வதேச அளவில், இந்தியாவின் நட்புறவில் சிக்கல் ஏற்படும்.

    மதிப்பீட்டு முறை

    வல்லரசு நாடாக மாறும் உறுதி ஏற்று விட்ட நிலையில், ௩௦ சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பது ஏன்?

    மக்களின் கல்வியறிவை வளர்க்கவும், பொருளாதாரத்தை முன்னேற்றவும், பல நிதியுதவி, மானியம் ஆகியவை வழங்கப்படுகிறது.மக்களுக்கு வழங்கப்பட்ட மானியம், வேறு வகையில் சென்று கொண்டிருந்தது. அதை மாற்றவே, நேரடி மானிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் ஒரே வகை பாடத்திட்டம் உருவாக்க முடியாதா?

    இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டம், பாடங்கள், பயிற்று முறை, தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறை உள்ளது.

    கல்வி கொள்கை

    இங்கே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயர், மற்ற மாநிலத்தவருக்கு தெரியாது. அங்கே உள்ள தியாகிகளின் பெயர், இங்கே தெரியாது. இந்தியா பல மாநிலங்கள் கொண்ட கூட்டாட்சி தத்துவத்தில் செயல்படுகிறது. தற்போது சமமான கல்வி வழங்க, தேசிய அள வில் கல்வி கொள்கை உருவாக்கப்படுகிறது. அதன் பின், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை நோக்கி செல்லலாம்.

    இந்தியாவில் வேளாண்மை வளர வேண்டுமா; தொழிற்துறை வளர வேண்டுமா?

    இரண்டும் வளர வேண்டும். வேளாண்மை வளர்ந் தால் தான், தொழிற்துறையும் வளரும்; தொழிற் துறை வளர்ந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், பொருளாதாரம் உயரும். விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில், விவசாயத்திற்கே என் முன்னுரிமை.

    நடிகர், அரசியல்வாதி, ஆசிரியர் என, ஒவ்வொரு வரும் தங்கள் பிள்ளைகளை, தங்களை போல் வர விரும்புகின்றனர். ஆனால், ஒரு விவசாயி தன் பிள்ளையை, விவசாயியாக்க விரும்புவதில்லை. இந்த நிலைமாறும் வகையில், வேளாண் துறை வளர வேண்டும்.

    உரிமை

    சமூக வலைதளங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவு செய்வது, அனைவருக்கும் சுதந்திரமான உரிமை. ஆனால், எந்தவித பிழை திருத்தம் இன்றி, எப்படி வேண்டு மானாலும் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. செய்தி தாள்களில் தவறுகள் வந்தால், அதை திருத்தி கொள்ளலாம். அதற்கென, ஆசிரியர் குழு இயங்கு கிறது; ஆனால், சமூக வலைதளத்திற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதற்கு, ஒழுங்குமுறை தேவை.

    மாணவி கேட்டார்

    'இந்தியாவில் ஜாதியை ஒழிப்போம்' என, மத்திய அரசே உறுதி ஏற்க சொல்கிறது. அப்படியென்றால், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவது ஏன்?

    குறிப்பிட்ட ஜாதியினர், நம் நாட்டில் கோவிலுக்குள் செல்ல முடியாமலும், கல்வி அறிவு கிடைக்காமலும், சம உரிமை இன்றியும், அடக்கி, ஒடுக்கப்பட்டனர். அவர்களையும் சமமாக கொண்டு வர, இட ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது. 'யாரோ செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். இட ஒதுக்கீட்டில் நான் பாதிக்கப்படுகிறேன்' என, ஒரு மாணவி என்னிடம் கேட்டார்.

    'எப்படி உன் மூதாதையரின் சொத்து உனக்கு கிடைக்கிறது' என, கேட்டேன். 'அது பாரம்பரியமாக வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது' என்றார். அப்படி தான், ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பாரம்பரியமாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அனைவரும் சமம் என்ற நிலை வரும் போது, இதை பற்றி யோசிக்கலாம்.இவ்வாறு, வெங்கையா நாயுடு பதில் அளித்தார்.

    No comments: