மாணவர்களின் கற்றல் விளைவுகளை, ஆசிரியர்கள் அறிந்து கொள்ள, மாநில அளவிலான பயிற்சி முகாம், ஈரோட்டில் நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாநில அளவில் கற்றல் விளைவுகள் தொடர்பாக உயர் தொடக்க நிலை ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், ஈரோடு, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது அஸ்லாம், சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலைய விரிவுரையாளர் ஆனந்தி பயிற்சி அளித்தனர்.
முகாமில் மாநிலம் முழுவதும் இருந்து ஒரு பட்டதாரி ஆசிரியர், ஒரு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலைய ஆசிரியர், வட்டார வள மைய ஆசிரியர் என மாவட்டத்துக்கு ஆங்கில பாடப்பிரிவுகளை சேர்ந்த மூன்று மாவட்ட முதன்மை கருத்தாளர்கள் வீதம் முதற்கட்டமாக, 16 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு மாணவ, மாணவியரின் கற்றல் விளைவுகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது அஸ்லாம் கூறியதாவது:
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை கீழ் செயல்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில், ஒவ்வொரு மாணவரின் ஒவ்வொரு பாடங்கள் பற்றிய, கற்றல் விளைவு தொடர்பாக இப்பயிற்சி நடக்கிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாநில கருத்தாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தமிழகத்தை ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பாடவாரியாக இன்று (நேற்று) துவங்கியது.
ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்களுக்கு, ஆங்கில பாடப்பிரிவுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் ஈரோட்டில் நடக்கிறது. இன்று நிறைவு பெறுகிறது. பயிற்சி இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டத்தில் 16 மாவட்டங்களும், இரண்டாம் கட்டத்தில், 16 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக, 30, 31ல் மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட கருத்தாளர்கள் மூலம் செப்.,6, 7 தேதிகளில் பாடவாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியில் இதுபோன்ற பயிற்சி முகாம் நடக்கிறது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆங்கில ஆசிரியருக்கான பயிற்சி விழுப்புரத்தில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முகாமில் எஸ்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் சேகர், பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமி நரசிம்மன் மற்றும் கருத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment