ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்து கேட்பு கூட்டம், சென்னையில், இன்று நிறைவு பெறுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், 2016ல் அமல்படுத்தப்பட்டன. அதை, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, பிப்., 22ல், முதல்வர் பழனிசாமி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ஊதிய விகிதங்களை மாற்றிஅமைப்பது குறித்து, பரிந்துரைகள் அளிக்க, ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது.இக்குழு, சென்னை, கடற்கரை சாலையில் உள்ள, லேடி வெலிங்டன் பள்ளியில், மே, 26, 27ல், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது.
இரண்டு நாட்களில், 150க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், கோரிக்கை மனு அளித்தனர்.இரண்டாம் கட்டமாக, நேற்று விடுபட்ட சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களிடம், கருத்து கேட்கப்பட்டது. இன்று மாலையுடன், கருத்து கேட்பு நிகழ்ச்சி முடிகிறது.
No comments:
Post a Comment