வரும் ஆண்டு முதல் மத்திய அரசின் 'ஆயுஷ்' துறையின் கீழ் வரும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கும், 'நீட்' தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு 'நீட்' தேர்வு எழுத வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் 'ஆயுஷ்' துறையின் கீழ் வரும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கும் 'நீட்' தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
எனவே அடுத்த ஆண்டு முதல் மேற்கண்ட படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகும். இந்த உத்தரவானது யோகா உள்ளிட்ட இயற்கை மருத்துவ படிப்புகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபதி யசோ பத் நாயக் இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
No comments:
Post a Comment