பள்ளிக் கல்வித் துறையில் நாடே திரும்பிபார்க்கும் வகையில் 41 அறிவிப்புகளை முதலைமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
** எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கபட்டார்.
** இதையடுத்து அவர் கல்வித்துறையில் புதிது புதிதாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
** பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
** அதில் இனி மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் கிடையாது எனுவும் இனிமேல் கிரேடு முறையில் தான் மார்க் வரும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
** மேலும் இனிவரும் காலங்களில் பனிரெண்டாம் வகுப்பிற்கு வழங்கபட்டு வந்த 1200 மதிப்பெண்களை குறைத்து 600மார்க்குகலாக மற்றம் செய்வதாக அறிவித்தார்.
** இதைதொடர்ந்து பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என அறிவித்து கல்லூரிகளில் உள்ளது போல அரியர்ஸ் முறை இதில் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.
** இந்நிலையில் தற்போது புதிதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
** இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
** மாணவர்களின் எதிர்காலத்தை கருதி 41 அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்.
** இதுகுறித்த அறிவிப்பு வரும் 6 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி அனுமதியுடன் வெளியிடப்படும்.
** இந்த அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிபார்க்கும் வகையில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
** இதனால் அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்கும் எனமாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment