பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
லாபம் ஈட்டிய நிறுவன ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 20 சதவீதமும் , நஷ்டம் அடைந்த நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ், கருணைத்தொகை வழங்கப்படும். மின்சாரம், போக்குவரத்து, கூட்டுறவு துறை, பாடநூல் கழகம் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 69 ஆயிரத்து 610 தொழிலாளர்கள் போனஸ் பெறுவர். மொத்தம் அரசுக்கு ரூ. 489 . 26 கோடி செலவாகும். போனசாக நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக 8 ஆயிரத்து 400 முதல் அதிகப்பட்சம் 18, 800 வரை கிடைக்கும்.
வீடு, குடிநீர், கழிவு நீரகற்று ஊழியர்களுக்கு 10 சதவீத போனசும், ரப்பர்கழகம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனசும் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment