கடந்த இரண்டு தேர்தலை விட, இம்முறை அதிகளவில், தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஒரு லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின. அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், 85 ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாகின. இம்முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், வேன் டிரைவர்கள் என, மொத்தம், 6.26 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களில், 14ம் தேதி வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தபால் ஓட்டை பதிவு செய்தனர். அதன் பின்னும் ஏராளமானோர், தபால் ஓட்டு போட்டுள்ளனர். எனவே, இம்முறை, 4 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகியிருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
1 comment:
தங்கள் கருத்து சாிதான்.ஆனால் தபால் ஒட்டுகள் ஏராளமான எண்ணிக்கையில் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளதே ??? ஏன் ??
தவறுகளைஆய்ந்து தீா்வு அறிவிக்க வேண்டும்.
இராதாபுரம் தொகுதியில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சான்றொப்பம் அளித்த காரணத்திற்காக 200 தபால் ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி 20.05.2016 தினமணியில் உள்ளது. இது சாிதானா ? சான்றொப்பம் இட அவர்களுக்கு உாிமை உள்ளது என்று கேள்விப்பட்டேன்.வருங்காலத்தில் தபால் ஒட்டுகளில் செல்லாதவையானவை இல்லாமல் செய்ய என்ன செய்யலாம் ? தவறு எங்கே நடந்துள்ளது.ஒரு விவாதம் நடத்தலாம்
Post a Comment