விரைவில், முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளதால், நேரு விளையாட்டு அரங்கம், சென்னை பல்கலை மண்டபத்திற்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டு உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன. ஆட்சியை பிடிப்பது யார் என்பது, மதியத்திற்குள் தெரியும். யார் ஆட்சியை பிடித்தாலும், ஒரு வாரத்திற்குள், புதிய முதல்வர் பொறுப்பேற்பார்.
தி.மு.க., ஆட்சியை பிடித்தால், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கம்; அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தால், சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா மண்டபம் அல்லது, நந்தம்பாக்கத்தில் உள்ளவர்த்தக மையத்தில், முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழையால், மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்கும் என, எதிர்பார்க்கப்படும் நேரு உள் விளையாட்டு அரங்கம், வர்த்தக மையம், சென்னை பல்கலை மண்டபத்திற்கு, தடையில்லா மல் மின்சாரம் வழங்குவதற்கான பணிகளில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது. அதே போல், அந்த இடங்களில், விழா ஏற்பாடிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment