Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 18, 2016

    248 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி

    பிளஸ் 2 தேர்வில், தமிழகம் முழுவதும், 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும், 2,704 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 3 லட்சத்து, 47 ஆயிரத்து, 478 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களின், இரண்டு லட்சத்து, 97 ஆயிரத்து, 641 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:


    பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த ஆண்டு, 85.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 248 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு, 196 பள்ளிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, பள்ளிக்கல்வித் துறையின் முயற்சியால், கூடுதலாக, 52 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    வளர்ச்சி பாதையில்...:கடந்த 2012ல், 41 அரசு பள்ளிகள் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, இந்த ஆண்டு, 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.அதன் விவரம்:

    ஆண்டு தேர்ச்சி சதவீதம்
    2012 41
    2013 100
    2014 113
    2015 196
    2016 248

    No comments: