தேசிய புதிய கல்விக் கொள்கை-2016 என்ற தலைப்பிலான கருத்தரங்கம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு எம்.தண்டபாணி தலைமை வகித்தார்.
சி.ஜெயபிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
புதிய தேசிய கல்விக் கொள்கை-2016 என்ற தலைப்பில் அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரான பேராசிரியர் பி.ராஜ மாணிக்கம் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் ச.செல்லத்துரை, மாவட்டப் பொருளாளர் வி.உமாசங்கர், மாவட்டச் செயலாளர் வி.ராமமூர் த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் 10-ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் நூறு சதம் தேர்ச்சி பெற்ற உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைச் செயலாளர் மு.பாலச்சந்திரமூர்த்தி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment