இந்திய அளவில் ஆங்கில மொழித் திறன் தொடர்பான போட்டியில் கலந்துகொண்டு பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்ற திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளிக்கு ‘தி இந்து’ வாசகர்கள் வழங்கிய பொருளுதவியால், தற்போது தொடுதிரை மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
திருவாரூர் மாவட்டம் நீடாமங் கலம் அருகே உள்ள காளாச் சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை 142 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியில் சேர்ந்த ஆனந்த், மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலத்தை செயல் விளக்கத்துடன் கற்பித்து வருகிறார். இதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த அரசுப் பள்ளியில் ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ என்ற போட்டியில் கலந்துகொண்டு, தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதல் பரிசைப் பெற்று அதற்கான விருதையும் வென்றுள்ளனர். அதேபோல, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற, ஆங்கிலப் பேச்சு மற்றும் செயல்திறன் போட் டியில் கலந்துகொண்டு ‘ஸ்பிரிட் ஆப் கம்யூனிட்டி’ என்ற விருதை யும் பெற்றனர்.
இது தொடர்பாக, ‘தி இந்து’ நாளிதழில், கடந்த ஏப்ரல் 6-ம் தேதி செய்தி வெளியானது. மேலும், ‘தி இந்து’ ஆன்லைன் பகுதியில் அன்பாசிரியர் என்ற தொடரில், ‘உளவியல் ஊக்கம் தரும் ஆசான்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், இப்பள் ளியின் ஆசிரியர் ஆனந்த், தன்னுடைய மாணவர்களின் திறமைகள் குறித்து வெளிப்படுத்தி யிருந்தார். இவற்றைப் படித்த ‘தி இந்து’ வாசகர்கள், காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பொருளு தவிகளைச் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் ஆனந்த் கூறியபோது, “எங்கள் பள்ளி தொடர்பாக ‘தி இந்து’வில் வெளியான செய்தியைப் படித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள சோமநாதன் என்பவர் மாணவர்களுக்காக ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள லேப்-டாப்பை அனுப்பிவைத்தார். வகுப்பறை ஒன்றில் ரூ.31 ஆயிரம் மதிப்பில் 400 சதுர அடி பரப்பளவில் அவரே டைல்ஸ் பதித்துக் கொடுத்தார்.
கத்தாரில் உள்ள சுரேஷ் என்ப வர் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள தொடுதிரை (டச் ஸ்கீரின்) வழங்கி னார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ராமசேஷன், ரமேஷ் ஆகியோர் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள புரொ ஜெக்டரை வழங்கினர். தஞ்சாவூர் அகம் அறக்கட்டளையினர் ரூ.20 ஆயிரம் மதிப்பில் செயல்வழிக் கற்றல் வகுப்புக்காக மேஜை களையும், நாற்காலிகளையும் வழங்கினர். தஞ்சாவூரில் காவல் துறையில் பணியாற்றும் திராவிட மணி, ரூ.2,500 மதிப்புள்ள மார்க்கர் போர்டை வழங்கினார். வேலூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அனுப்பி வைத்துள்ளார்.
‘தி இந்து’ வாசகர்களின் பொ ரு ளுதவியால், எங்கள் பள்ளி மாணவர்கள் நவீன வகுப்பறையில், இதர ஆங்கிலப் பள்ளி மாணவர் களுடன் போட்டியிடும் அளவுக்கு படிப்பில் அக்கறை செலுத்தி வருகின்றனர்” என்றார்.
No comments:
Post a Comment