தனியார் சுயநிதி பல்கலைகளில், இன்ஜி., படிப்பதற்கான, மத்திய அரசின் இட ஒதுக்கீடு வாரியத்தின் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. மத்திய அரசின் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜே.இ.இ., 'ரேங்க்' பட்டியல் மூலம், மாணவர் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தனியார் சுயநிதி கல்லுாரி மற்றும் பல்கலைகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது.
நாடு முழுவதும், 19 நிறுவனங்களில் ஜே.இ.இ., மதிப்பெண்ணின் படி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், விருதுநகர் கலசலிங்கம் பல்கலை மற்றும் தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை ஆகியவற்றில் சில பாடப்பிரிவுகளில், ஜே.இ.இ., மதிப்பெண்படி மாணவர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான, 'ஆன் - லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது; வரும், 28ம் தேதி வரை பதிவு செய்யலாம். 29ம் தேதி நடக்கும் கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவலை, http://www.csab.nic.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment