மேலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர் சூரியகுமார், அலைபேசியில் பாடங்களை 'டவுன்லோடு' செய்து கூடுதல் விளக்கத்துடன் பாடங்களை நடத்தி வருகிறார்.இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியையாக டெய்சி நிர்மலா ராணி உள்ளார். மாணவியருக்கு எளிதாக புரியும் வகையில் சில வழிமுறைகளை ஆசிரியர் சூரியகுமார் கையாள்கிறார்.
சமூக அறிவியல் பாடங்கள் குறித்த கூடுதல் விபரங்களை வலைதளங்களில் 'டவுன்லோடு' செய்து முழு விளக்கத்தோடு ஒளி, ஒலிக்காட்சி மூலம் பாடம் நடத்தி வருகிறார்.அவர் கூறியதாவது: தமிழக அளவில் வரலாறு ஆசிரியர் என்ற 'வாட்ஸ் ஆப்' குரூப்பை உருவாக்கி அலைபேசி மூலம் பாடங்களை உடனுக்குடன் தரவிறக்கம் செய்து பெரிய ஸ்கிரீன் மூலம் மாணவிகளுக்கு பாடம் நடத்துகிறேன். அதனால் வரைபடங்கள் மற்றும் வரலாற்று சுவடுகளை துல்லியமாக காண்பிக்க முடிகிறது.
ஜவஹர்லால் நேருவின் சுதந்திர தின நள்ளிரவு உரையை வீடியோ கிளிப்பிங் மூலம் காட்ட முடிகிறது. அதனால் மாணவிகள் ஆர்வத்துடன் பாடங்களை எளிதான முறையில் கற்று அதிக மதிப்பெண் பெறுகின்றனர். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment