மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான அறிக்கை ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பாக்கப்படுகின்றது. ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
புதிய ஊதிய விகிதப்படி குறைந்தபட்சம் ஊதியம் ரூ. 7000-த்தில் இருந்து ரூ.18000 -ஆக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் அதிகப்பட்சமாக ரூ. 90000-த்தில் இருந்து ரூ. 250000-ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் குறைந்தப்பட்சம் ஊதியம் ரூ. 26000-ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் சங்கம் வலியுறுத்திவந்தன. அந்த அளவுக்கு உயர்த்த மறுத்துவிட்ட மத்திய அரசு குறைந்தபட்சம் ஊதியம் ரூ 20000-ஆக உயர்த்த ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது.
இது பற்றி மத்திய அரசு குழு பரிசீலிக்கும் என கூறப்பட்டது. இதனால் புதிய ஊதிய விகிதங்கள் உடனடியாக அமல்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் நிலவி வந்தது. ஏனேனில் புதிய ஊதிய விகிதம் இம்மாதம் இறுதியில் கிடைக்கும் வகையில் அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று ஊழியர்களின் சங்கங்கள் கூட்டுநடவடிக்கை குழு அமைப்பாளர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment