வீடுகளில், குறைபாடு உடைய மின் மீட்டர்களை பொருத்தியதால் தான், மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், ஒரு முனை அல்லது மும்முனை மின் மீட்டர்களை பொருத்தி வருகிறது. தற்போது, மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிடுவதற்கு வீடுகளில் உள்ள பழைய மீட்டருக்கு பதில், 'ஸ்டேடிக்' என்ற நவீன மீட்டரை, இலவசமாக பொருத்தி வருகிறது.
இந்த மீட்டர்களை சென்னை, ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் உ.பி., மாநிலங்களில் உள்ள உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. உ.பி., மாநிலம், நொய்டாவை சேர்ந்த, தனியார் நிறுவனத்திடம் இருந்து, 2011 முதல், 2015 வரை, 7.20 லட்சம், ஒரு முனை இணைப்பு மின் மீட்டர்களை, மின் வாரியம் கொள்முதல் செய்து உள்ளது. அதில், 1.20 லட்சம் மீட்டர்களில் குறைபாடு இருப்பதாக, சம்பந்தப்பட்ட நிறுவனமே கண்டறிந்து உள்ளது. அவற்றை மாற்றி தருவதற்கு, அந்த நிறுவனம் முன்வந்தும், அதை, மின் வாரியம் அலட்சியப்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
தரமானவை
இதே போல், மற்ற நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்ட மின் மீட்டர்களிலும் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த குறைபாடு உடைய மீட்டர்களால் தான், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளிலும், அதிக மின்சாரம் பயன்படுத்தியது போல பதிவு ஆவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வீடுகளில் தரமான மின் மீட்டர்கள் தான் பொருத்தப்படுகின்றன' என்றனர்.
No comments:
Post a Comment