கிழக்கு இந்தியாவின் நகரப்பகுதிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கும் அளவிலான ராட்சத பூகம்பம் ஒன்று வங்காளதேசத்திற்கு அடியில் உருவாகி உள்ளதாக ஆய்வில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கையானது நேச்சர் ஜியோ சயன்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த ஆய்விதழ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அறிவியல் ஆய்வாளர்கள் உலகின் மிகப்பெரிய ஆற்றுப்படுகையின் கீழ்உள்ள 2 கண்ட தட்டுக்களில் (டெக்டானிக் பிளேட்) அழுத்தம் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். தற்போது இந்த பகுதிகளில் கீழே உள்ள டெக்கானிக் பிளேட் எனப்படும் தட்டுகளின் அழுத்தம் மிகவும் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் உள்ளன இதனால் மிக பயங்கரமான பூகம்பம் ஒன்று ரிக்டரில் 8.2 முதல் 9 அல்லது 9-க்கும் அதிகமான அளவுக்கு பதிவாகும் அபாயம் உள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியாவின் பெரும்பகுதிகளைக் கொண்டுள்ள ராட்சத கண்டத் தட்டு வடக்கு நோக்கி முட்டி மோதி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரையில், இத்தகைய சப்டக்ஷன் மண்டலம் கடலுக்கு அடியில்தான் இருந்தது; ஆனால் இப்போது இந்தியா, வங்கதேசத்துக்கு கீழ் உள்ள நிலப்பகுதியில் உள்ளது. இதுவே பூகம்ப அச்சுறுத்தலை இரட்டிப்பு ஆக்கியுள்ளது.
இதுபோன்ற நிகழ்வின் காரணமாக 2015-ல் நேபாளத்தில் 9000 உயிரிழப்பு மற்றும் பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் பூகம்பம் ஏற்பட்டது என்றும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment