கலந்தாய்வில் இடமாறுதல் பெறும் ஆசிரியர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும், என்ற புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்காக மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
தொடக்க கல்வித்துறையில் மாவட்ட அளவிலான பணி நிரவல் மற்றும் சொந்த மாவட்டங்களில் பணியாற்றுவோர் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படுவர். தற்போது வெளியிடப்பட்ட புதிய அரசாணையில், மாவட்டம் விட்டு மாவட்ட இடமாறுதல் செய்யப்பட்ட பிறகே பதவி உயர்வு வழங்கப்படும். பணியிட மாறுதல் பெறும் ஆசிரியர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும். மேலும் கடந்த ஆண்டில் பணியிட மாறுதல் பெற்றவர்கள் இந்த ஆண்டு மாறுதல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment