உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம்., எம்.சிஎச். ஆகிய 3 ஆண்டு கால படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தப் படிப்புகளுக்கு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 189 இடங்களில் 50 சதவீத இடங்கள் அரசு மருத்துவர்களுக்கும், மீதமுள்ள இடங்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அங்கு படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி, வெளிமாநிலத்தைச் சேர்ந்த, அங்கு படித்த 166 பேர் உள்பட 836 பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து, 2 தாள்கள் அடங்கிய இந்தத் தேர்வு சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 வரை தேர்வு நடைபெறவுள்ளது. இந்த மாத இறுதியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment