மொபைல் பேங்கிங் ஆப்ஸ் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் இனி பாஸ்வேர்ட் எனப்படும் ரகசிய குறியீட்டை எண்களை நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லை. இதுவரை பயன்பாட்டில் இருக்கும் பாஸ்வேர்ட் முறையை மாற்றி விட்டு புதிய முறையை கையாள வங்கிகள் முடிவு செய்துள்ளன.
இனி பாஸ்வேர்ட் முறைக்கு பதிலாக வாடிக்கையாளர்களின் கைரேகையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் முறையை கொண்டு வர முடிவு செய்துள்ளன. பயோமெட்ரிக் முறையில் வாடிக்கையாளர் பற்றிய சில தகவல்களை சேகரித்து வைக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. உலகம் முழுவதிலும் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதாலும், ஒருவருக்கு பல வங்கிகளில் வங்கி கணக்கு இருப்பதால் பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்வதில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவும், பாதுகாப்பான பணபரிவர்த்தனையை மேற்கொள்ளவும் இந்த முறையை அறிமுகம் செய்ய வங்கிகள் தீர்மானித்துள்ளன.
இதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஐசிஐசிஐ வங்கி, டிசிபி உள்ளிட்ட நிதித்துறை அமைப்புக்கள் ஆய்வு செய்து வருகின்றன. இதன் முதல்கட்டமாக மொபைல் பேங்கிங்கில் மட்டுமின்றி பயோமெட்ரிக் முறையில் இயங்கும் ஏடிஎம் இயந்திரத்தை டிசிபி வங்கி பெங்களூருவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, பின் நம்பர் இல்லாமல் பணம் பெற முடியும்.
No comments:
Post a Comment