அண்ணா பல்கலை மூலம் பி.ஆர்க்., படிப்பில் சேர, 2,600 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஜூலை இறுதி வாரம், கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிகிறது. அண்ணா பல்கலையில் தற்போது, பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், 27ல் துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 41 பி.ஆர்க்., கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 9ம் தேதி விண்ணப்ப பதிவு முடிந்தது. மொத்தம், 2,589 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மொத்தமுள்ள, 2,400 இடங்களில், 1,700 இடங்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தற்போது, விண்ணப்ப பரிசீலனை நேற்று முன்தினம் துவங்கியது. 'நாட்டா' எனப்படும், தேசிய ஆர்க்கிடெக்ட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் படி, தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும். நாட்டா தேர்வு எழுதாதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தரவரிசைப்படி, மாணவர்களுக்கான கவுன்சிலிங், இம்மாத இறுதி வாரம் துவங்கும் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment