Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, July 13, 2016

    கோ-ஆப்டெக்ஸில் 100 உதவி விற்பனையாளர்கள் நியமனம்: போட்டித்தேர்வு மூலம் பணி

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புதிதாக 100 உதவி விற்பனையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் உதவி விற்பனையாளர் பணியில் 100 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
    எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 33 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



    தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.உதவி விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் www.cooptex.gov.in இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

    விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை விண்ணப்பக் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட் மற்றும் இதர ஆவணங்களுடன் ஜூலை 25-ம் தேதிக்குள் சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமைஅலுவலகத்துக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை, பணிநியமனம், இடஒதுக்கீடு வாரியாக காலியிடங்கள் உள்ளிட்டவை தொடர்பான கூடுதல் விவரங்களை கோ-ஆப்டெக்ஸ் இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம். உதவி விற்பனையாளர் பணிக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு சம்பளம் ரூ.11,500 வழங்கப்படும். அதோடு வருங்கால வைப்புநிதி (இபிஎப்), பணிக்கொடை உள்ளிட்ட இதர சலுகைகளும் உண்டு. இந்த தகவல் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

    No comments: