பிளஸ் 1 மாணவர்களுக்கு முழு அளவில் பாடப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில் முதல் இடைத் தேர்வு தேதியை கல்வித்துறை அறிவித்தது மாணவர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புகள் துவங்கி ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையிலும் கலை, அறிவியல் என அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் முழு எண்ணிக்கையில் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. சில மாவட்டங்களில் மொழிப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் &'மெயின்&' பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை.
பெரும்பாலான மாவட்டங்களில் பொருளியல், வணிகவியல் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் பிளஸ் 1க்கு முதல் இடைத்தேர்வு ஜூலை 25ல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் இருப்பு இல்லை என அதிகாரிகள் கைவிரிக்கின்றனர். அந்தந்த மாவட்டங்களில் இருப்பு உள்ள புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் அனைவருக்கும் அனைத்து புத்தகங்கள் கிடைக்காத நிலையுள்ளது. இந்த வாரம் புத்தகங்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.
No comments:
Post a Comment