ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கும், ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கச் செய்துள்ள முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) முதல் 2 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழயர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச். வெங்கடாசலம், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
எங்களது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் தொழிலாளர் நலத் துறையின் தலைமை ஆணையருடன் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கத்தினரும், அரசுடைமை வங்கி ஊழியர்கள் சங்கத்தினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இரண்டு நாள் போராட்டத்தால் வங்கிச் செயல்பாடுகள் முழுமையாக பாதிக்கப்படும்.
No comments:
Post a Comment