ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எனப்படும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, ஓராண்டிற்கான ஆரம்பகட்ட கம்ப்யூட்டர், 'ஹார்டுவேர்' இலவச பயிற்சி முகாம் ஆக., 1ல் துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை, 11 முதல் கிடைக்கும். ரூ.500 ஊக்கத்தொகை இது குறித்து, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுக்கான மண்டல வேலை வாய்ப்பு அலுவலர் எஸ்.கே.ஷா கூறியதாவது:
மத்திய அரசின், தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் கீழ், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான, வேலை வாய்ப்பு, பயிற்சி மையம் சார்பில், ஆண்டுதோறும் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான, ஆரம்பக்கட்ட கம்ப்யூட்டர், 'ஹார்டுவேர்' இலவச பயிற்சி முகாம், ஆக., 1ம் தேதி துவங்குகிறது. ஓராண்டு நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள், 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி, ஐ.டி.ஐ., எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், 'இன்ஸ்டுமென்டேஷன்' படித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து இருக்க வேண்டும். அறிவியல் பாடம் இல்லாமல் படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பயிற்சியின் போது, கூடுதல் வகுப்புகள் நடத்தப்படும்.
விண்ணப்பங்கள் இலவசம்: சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டட வளாக அலுவலகத்தில், ஜூலை 11ம் தேதி முதல், 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பத்துடன் கல்லுாரி, கல்வி, ஜாதி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ், இரண்டு புகைப்படம் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூலை 29ல், நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, பயிற்சிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு எஸ்.கே.ஷா கூறினார்.
No comments:
Post a Comment