அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்பட உள்ளன. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை விருப்ப இடமாறுதல் செய்யப்படுகிறது. இதற்கு, மாநில அளவில், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்து, கவுன்சிலிங் என்ற கலந்தாய்வு, ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் கோடை விடுமுறையில் நடத்தப்படும். ஆனால், ஐந்து ஆண்டுகளாக, இந்த கலந்தாய்வு தாமதமாகவே நடத்தப்படுகிறது.
இதனால், பள்ளிகள் துவங்கி, சில மாதங்களான பின், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த கலந்தாய்வுக்கு பிறகே, காலியிடங்களில் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் இட மாறுதல் பெற முடியும். இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு நடப்பு மாதம், மூன்றாவது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கலந்தாய்வுக்காக புதிய விதிகளை, பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ளது.
ஓரிரு தினங்களில்... : 'இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியாகும்; முறைகேடு, தில்லுமுல்லுக்கு இடம் அளிக்காமல், அதிகாரிகள் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்பு, அதிகாரத்தை தள்ளி வைத்து விட்டு கலந்தாய்வு நடத்தப்படும்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment