டில்லியில் நடக்கும் 2017 குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க விருதுநகர் மாவட்ட மாணவர் உட்பட தமிழக கல்லுாரி மாணவர்கள் ஆறு பேர் தேர்வாகி உள்ளனர்.குடியரசு தினத்தன்று முப்படைகள், துணை ராணுவம், என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பு டில்லியில் நடக்கும். இந்த அணி வகுப்பில் பங்கேற்க வீரர்கள், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் வெற்றி பெறுபவர்கள் அணிவகுப்பில் கலந்துகொள்வர்.
அதன்படி இந்தாண்டு அணி வகுப்பில் பங்கேற்க தமிழகத்தை என்.எஸ்.எஸ்., மாணவர்களான சென்னை பல்கலை டேனியல், கார்த்திக், கோவை பாரதியார் பல்கலை ராகுல், மதுரை காமராஜ் பல்கலை அலெக்சாண்டர், திருச்சி பாரதிதாசன் பல்கலை ஜெயபிரசாந்த், சந்தோஷ் பாபு ,விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சோழபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர் அலெக்சாண்டர் தேர்வாகி உள்ளனர்.
No comments:
Post a Comment