Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 18, 2016

    மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.. வாழ்க்கைக்கு உதவும் கல்வியே சிறந்தது - ஜெர்மன் அறிஞர் பேச்சு


    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர். வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்று கொண்டால் சிறப்பாக இருக்கும். மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை என ஜெர்மன் நாட்டை சேர்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.
    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர். நிகழ்வுக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன்,எல்.ஐ.சி.வினை தீர்த்தான், அழகப்பா பல்கலைகழக அலுவலர் காளைராஜன், மணலூர் அழகு மலர் பள்ளி தாளாளர் யோகலேட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேசிய சுபாஷினி, நிறைய வாசித்தால் நல்ல குணங்கள் ஏற்படும்.வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்று கொண்டால் சிறப்பாக இருக்கும். மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.ஜெர்மானியர்கள் கடமை உணர்வு அதிகம் உள்ளவர்கள்.அங்கு இயற்கை சூழ்நிலை நன்கு பாதுகாக்கபட்டுள்ளது. இயந்திரவியல் கல்வி முறை அதிகம். அறிவை ஆக்க பூர்வமாக பயன்படுத்தும் நாடுகளில் ஜெர்மன் முன்னிலை வகிக்கிறது. jerman tamil marapu arakattalai president subhashini discussion with school student தமிழகத்தில் தொன்மையான விசயங்களான கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும். கற்கும் பருவத்தில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.கணிதம், கணிபொறி தொடர்பான அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் பெரிய வெற்றிகளை அடையலாம். புத்தகங்களை நிறைய வாசித்தல் நல்ல குணங்கள் உண்டாகும். இனத்தின் வரலாறை பாதுகாப்பதுதான் சந்திதியனரின் முக்கிய கடமை. ஜெர்மன் நாட்டில் அதிகமான வளர்ந்த தொழில்நுட்பம் பயன்படுவதால் அந்த நாட்டை தேர்ந்தெடுத்து அங்கு சென்று பணிபுரிந்து வருகின்றேன். எந்த விசயம் நமக்கு வரவேயில்லை என்று நினைக்கிறோமோ அதனை மீண்டும்,மீண்டும் முயற்சி செய்து அது நன்றாக வரும் வரை அதனை தொடர்ந்து செய்ய வேண்டும். நிச்சயம் நம்மால் அதனை அடைந்து விட முடியும். கணினி மூலமாக நல்ல கல்வியை பெற்று வாழ்க்கையில் சிறந்த வெற்றியை பெற முயற்சி செய்ய வேண்டும். அது உங்களால் முடியும். உங்களின் கேள்வி கேட்கும் ஆற்றல் என்னை வியக்க வைக்கிறது. அதற்கு என் பாராட்டுக்கள். தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக பள்ளியின் செயல்பாடுகளை பாராட்டி மாணவர்களுக்கு கணினி கற்கும் வகையில் கணினி வழி கல்விக்காக கணினி ஒன்றினை பரிசாக வழங்கினார். கல்வி கற்பது வாழ்வில் இன்றியமையாதது. கல்வி கற்பதன் மூலம் பல வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். சிறந்த கல்வியாளர்களாக வர வேண்டும். வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கல்வி தான் சிறந்த, உற்ற நண்பனாக இருக்க முடியும். வீதிகளில் பல இடங்களிலும் பார்க்கும் போது ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. குப்பைகளை கொட்டக் கூடாது. அதற்கான இடங்களில் கொட்ட வேண்டும்.யாரேனும் குப்பையை கொட்டினால் அதைஎடுத்து தொட்டியில் போடவேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் போட்டால் ஏற்படும் கெடுதல்களை பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இளம் வயதிலேயே கீரை போன்ற சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் காயத்ரி, செந்தில்குமார், தனலெட்சுமி, ராஜேஷ், அய்யப்பன், ராஜேஸ்வரி, ரஞ்சித், ஜெனிபர்,ராஜி உட்பட பலர் கேள்விகள் கேட்டனர். ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

    No comments: